தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல்பகுதியில் செவ்வாய்க் கிழமை (நவ.30) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், அது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாகவும், பிறகு காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து வலுவடையவுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை:
திருவள்ளூர்
மதுரை
சிவகங்கை
தூத்துக்குடி
பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
செங்கல்பட்டு
திண்டுக்கல்
தேனி
கடலூர்
திருநெல்வேலி
ராமநாதபுரம்
காஞ்சிபுரம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.