நாடு முழுதும் உள்ள 1,790 தலைமை தபால் நிலையங்களில், 'க்யூ ஆர் கோட்' வாயிலாக பணம் செலுத்தும் திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.மத்திய அரசு, 'டிஜிட்டல்' முறையிலான பரிவர்த்தனையை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
பெரிய வணிக வளாகங்கள் முதல், சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை, க்யூ ஆர் கோட் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வர்த்தகர்கள் பணம் பெறுகின்றனர். இனி தபால் நிலையங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள வசதி செய்யப்படுகிறது. முதல் கட்டமாக, நாடு முழுதும் உள்ள 1,790 தலைமை தபால் நிலையங்களில் இந்த சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
'ஸ்பீடு போஸ்ட், பார்சல், பிசினஸ் போஸ்ட், டைரக்ட் போஸ்ட்' மற்றும் பதிவு தபால் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும், வாடிக்கயைாளர்கள் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர்கள் 'ஸ்கேன்' செய்ய வசதியாக அனைத்து கவுன்டர்களிலும், க்யூ ஆர் கோட் அட்டைகள் சுவர்களில் ஒட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, தபால் நிலையங்களில் இனி நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.