*இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்*
*சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான்.*
*♻️பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள்*
*♻️வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத் தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான்.*
*♻️அத்தகைய எழுச்சி மிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.*
*♻️வருங்கால சிற்பிகளை உருவாக்கும் அப்படிப்பட்ட ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்..*
*♻️மெல்லிய புன்னகை இருக்க வேண்டும். சிடுசிடுவென இருக்கும் முகம் மாணவர்களை கலவரப்படுத்தும்.*
*♻️தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும். அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையைக் கெடுத்து விடக் கூடாது.*
*♻️பாடத்திட்டத்தோடு நின்று விடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு,அன்றாடும் உலகில் நடக்கும் நிகழ்வுகளைச் சொல்ல வேண்டும்.*
*♻️மாணவர்களின் மனநிலையை புரிந்துக் கொண்டவராக இருக்க வேண்டும்.*
*♻️பாடம் நடத்தும் போதும், வீட்டுப்பாட வேலைகளைக் கொடுக்கும் போதும் மாணவர்களின் மன, உடல் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.*
*♻️தங்கள் வீட்டின் கோபத்தை, வகுப்பு அறையின் வாசப்படிக்குக் கூட கொண்டு வரக்கூடாது.*
*♻️தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, தொழில் ஈடுபாட்டுடன் வகுப்பறையில் செயல்பட வேண்டும்.*
*♻️ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டப் பழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.*
*♻️எப்போதும் திட்டக் கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, அவமானப் படுத்தக் கூடாது.*
*♻️எப்போதும் படி,படி என ஒரேடியாக முகாரி ராகம் பாடி, வெறுப்பு ஏற்றக் கூடாது.*
*♻️படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்து கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, காலில் விழுந்து வணங்கியவர்கள் உண்டு.*
*😎ஆம்.,நண்பர்களே..,*
*🏵️ஒருவன் கல்வியிலோ, தொழிலிலோ, செல்வச் செழிப்பிலோ உயர்ந்து வளர்ந்தால் அதனை மகிழ்ச்சியுடன் சற்றும் பொறாமையின்றி பகிர்ந்து கொள்பவர்கள் வாழ்க்கையில் இருவர் தான்.*
*ஒருவர் பெற்ற அன்னை அல்லது தந்தை .*
*மற்றொருவர்..,‘இவன் எனது மாணவன்’ எனப் பெருமிதப்படும் ஆசிரியர்.*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.