_*பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகன ஓட்டிகளுக்கு நன்மையா..? தீமையா...? விரிவான தகவல் இதோ...!!!*_
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் விவசாயிகளுக்கு நன்மை என்று கருத்து தெரிவித்துள்ள நிலையில் அது வாகன ஓட்டிகளுக்கும், வாகனத்திற்கும் நன்மையா? தீமையா? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பூமியில் வெப்பம் அதிகரிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு என எத்தனை எச்சரிக்கை வந்தாலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது பெட்ரோல் பயன்பாடு.
மக்கள் தொகை பெருக்கத்தை ஒட்டி உயரும் வாகனத்தின் பயன்பாட்டால் தொடர்ந்து அதிகரித்து வருகிறது பெட்ரோல் தேவை.
இதை ஈடுகட்ட விவசாய நிலங்கள், நடுகடல் என எத்தனை இடங்களில் தேடி தேடி அ லைந்தாலும் 90% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது கச்சா எண்ணெய்.
ஆகவே நீண்ட நெடுங்காலமாக வெளிநாடுகளை சார்ந்தே இருக்கிறது இந்தியாவின் பெட்ரோல் தேவை. இதைக் குறைக்க மின்சார வாகனங்களின் பக்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பினாலும் அது பெரிய அளவிற்கு ஈர்ப்பு ஏற்படுத்தவில்லை என்பது உண்மை.
இதனால் பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனால் அளவை அதிகரிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
சர்க்கரை ஆலைகளில் அரைக்கப்படும் கரும்பு சர்க்கரையிலிருந்து கிடைப்பது எத்தனால் எனப்படும் எரிபொருள்.
நெல் மற்றும் கோதுமை, வைக்கோல், அரிசி தவிடு, பருத்திச் சக்கை, மூங்கில் ஆகியவற்றில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது எத்தனால்.
உலகிலேயே அதிக அளவு கரும்பு உற்பத்தி செய்யும் நாடான பிரேசில் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் கார்கள் இருக்கிறது.
கரும்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் தற்போது பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவு வெறும் 10 சதவீதம் மட்டுமே.
இந்த அளவை இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் 20 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எத்தனால் கலப்பை அதிகரிப்பதன் மூலம் பெட்ரோல் விலை குறைவது வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம்.
அறுவடைக்குப் பிறகு பயிர் கழிவுகளை எரிக்காமல் அதன் மூலம் விவசாயிகளும் வருமானம் பெற வாய்ப்பு உண்டு.
இது இரண்டையும் விட மிக முக்கியமானது எத்தனால் உற்பத்தி மற்றும் பயன்பாட்டால் கிடைக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பயிர் கழிவுகள் எதிரிக்கப்படுவது தடுக்கப்படுவதோடு வாகனங்களில் இருந்து வரும் புகையின் அளவும் கணிசமான அளவில் குறையும்.
ஆனால் இந்தியாவில் தற்போதுள்ள வாகனங்களில் எஞ்சின்களில் 10 சதவீதத்திற்கும் மேல் எத்தனாலை பயன்படுத்த முடியாது என்பது எதார்த்தமான உண்மை.
அதற்கு காரணம் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வரும் வாகனங்களின் வடிவமைப்பும், தொழில்நுட்பமும் காரணம்.
பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் 10 சதவிகிதத்தை தாண்டினால் எஞ்சினில் உள்ள அலுமினிய பாகங்களை அரித்து விடும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
அத்துடன் என்ஜினுக்கு பெட்ரோலை கொண்டு செல்லும் ரப்பர் பாகங்கள் பெட்ரோல் டேங்க் ஆகியவையும் மோசமாகிவிடும் என்பது அவர்களுடைய கருத்தாக இருக்கிறது.
ஆகவே அதற்கு ஏற்ற வகையில் வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களையும் மாற்ற வேண்டியது அவசியம். அதைவிட மிக முக்கியமாக எத்தனால் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட வாகனங்களை கழுவும் பொழுது கூட கவனம் தேவை.
வெறும் பெட்ரோலில் தண்ணீர் கலக்காது என்பதால் கழுவும் போது தண்ணீர் சேர்ந்தாலும் அதில் பிரச்சனைகள் அதிகம் இல்லை.
அதே நேரத்தில் எத்தனால் கலந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்தால் தனியாக நிற்காமல் எத்தனாலுடன் கலந்து விடும்.
இதனால் வாகனங்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி பழுது ஏற்படும் ஆபத்தும் அதிகம்.
இது போன்ற குறைகளை சரி செய்யும் வகையில் வாகனங்களின் வடிவமைப்பையும் தொழில்நுட்பத்தையும் மாற்றினால் எத்தனல் பயன்பாடு எல்லோருக்கும் நல்ல எதிர்காலம் என்பதில் சந்தேகம் இல்லை.
🌷🌷_*
🌷🌷
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.