தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்ப் பெயர்கள் - ஒரு சிறிய ஆராய்ச்சி***
தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்ப் பெயர்கள் - ஒரு சிறிய ஆராய்ச்சி***
தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயர்களைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவற்றில் பெரும்பாலானவை கீழ்க்காணும் ஒரு சொல் கொண்டு முடிவதைக் காணலாம். இவ்வாறு, அவற்றில் ஒரு பொதுவான தன்மை இருப்பதைக் காணில், வியப்பைத் தரும்.
இங்கே தரப்பட்டுள்ளவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இந்தப் பட்டியலில் விடுபட்டவை நிறைய உள்ளன.
ஊர் -
தஞ்சாவூர், உறையூர், கடலூர், வேலூர், திருவாரூர், சாத்தூர், மேட்டூர், மேலூர், அரியலூர், திருவிடைமருதூர், திருக்கோவிலூர், திருக்கடையூர், திங்களூர், திருவாதவூர், ஆம்பூர், பேரூர்
குடி -
தூத்துக்குடி, பரமக்குடி, காரைக்குடி, அரியக்குடி, லால்குடி, ஆலங்குடி, நரிக்குடி, சாயல்குடி, குன்றக்குடி, திட்டக்குடி
பட்டி -
கோவில்பட்டி, பிள்ளையார்பட்டி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, சின்னாளப்பட்டி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, நேமத்தான்பட்டி, உறங்கான்பட்டி, பள்ளப்பட்டி
கோவில் -
அழகர்கோவில், நாகர்கோவில், சங்கரன்கோவில், திருவானைக்கோவில், வைத்தீஸ்வரன்கோவில், காளையார்கோவில், ஆவுடையார்கோவில், உப்பிலியப்பன் கோவில், நாச்சியார்கோவில், உத்தமர்கோவில், வெள்ளக்கோவில்
பள்ளி -
திருச்சிராப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, செங்கப்பள்ளி, அகஸ்தியம்பள்ளி, போச்சம்பள்ளி, தொரப்பள்ளி, காட்டுப்பள்ளி
கோட்டை -
பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, தேவகோட்டை, அருப்புக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஊத்துக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, நிலக்கோட்டை, நாட்டரசன்கோட்டை, பெரியகோட்டை, வல்லக்கோட்டை, வட்டக்கோட்டை, நாலுகோட்டை, வெம்பக்கோட்டை
பட்டினம் -
நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், அதிராம்பட்டினம், சதுரங்கப்பட்டினம், தேங்காய்பட்டினம், குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், தேவிபட்டினம், திருமலைராயன்பட்டினம், கோட்டைப்பட்டினம்
பாக்கம் -
கல்பாக்கம், கோடம்பாக்கம், அரும்பாக்கம், அச்சரப்பாக்கம், கீழ்ப்பாக்கம், பட்டினப்பாக்கம், காட்டுப்பாக்கம்
குளம் -
பெரியகுளம், கூடங்குளம், ஆலங்குளம், விளாத்திகுளம், சாத்தான்குளம், அழகன்குளம், நெடுங்குளம், புளியங்குளம், மாங்குளம், வாகைக்குளம், கொக்கிரகுளம், அச்சங்குளம், சொக்கிகுளம், ஊமச்சிகுளம், செட்டிகுளம், புளியங்குளம்
பாளையம் -
ராஜபாளையம், மேட்டுப்பாளையம், குமாரபாளையம், உத்தமபாளையம், பெரியபாளையம், மேலப்பாளையம், உடையார்பாளையம்
நல்லூர் -
திருவெண்ணைநல்லூர், ஐராவதநல்லூர், காங்கேயநல்லூர், ஹரிகேசநல்லூர், புன்னைநல்லூர், திருவிசநல்லூர், முத்தரசநல்லூர், ஆதிச்சநல்லூர், மண்ணச்சநல்லூர், வாசுதேவநல்லூர் அரகண்டநல்லூர், கரிவலம் வந்த நல்லூர்
மலை -
திருவண்ணாமலை, சுவாமிமலை, மருதமலை, சென்னிமலை, சிவன்மலை, ஆனைமலை, கழுகுமலை, நாகமலை, விராலிமலை, திருநீர்மலை, பிரான்மலை, குடுமியான்மலை, நார்த்தாமலை
குறிச்சி -
கள்ளக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, அரவக்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி, பூலாங்குறிச்சி, துவரங்குறிச்சி, தேவனாங்குறிச்சி
கிரி -
கிருஷ்ணகிரி, நீலகிரி, சங்ககிரி, சூளகிரி, ஏலகிரி, புவனகிரி, சதுரகிரி
குன்றம் -
திருப்பரங்குன்றம், திருக்கழுக்குன்றம், செங்குன்றம், நெடுங்குன்றம், கொடுங்குன்றம், திருமால் குன்றம், நெற்குன்றம், பூங்குன்றம், குமரன்குன்றம்
பாறை -
மணப்பாறை, வால்பாறை, பேச்சிப்பாறை, மயிலாடும்பாறை, குஜிலியம்பாறை, பூம்பாறை, சிப்பிப்பாறை
காடு -
திருவாலங்காடு, ஆற்காடு, ஏற்காடு, திருமறைக்காடு, ஊத்துக்காடு, திருவெண்காடு, மாங்காடு, திருவேற்காடு, களக்காடு, பாலக்காடு, தெப்பக்காடு
புரம் -
காஞ்சிபுரம், மாமல்லபுரம், விழுப்புரம், சமயபுரம், கங்கைகொண்ட சோழபுரம், ராமநாதபுரம், ராசிபுரம், தாராபுரம், திருக்கண்ணபுரம், எட்டயபுரம், உமையாள்புரம், கோனேரிராஜபுரம், ஆனந்ததாண்டவபுரம், சேங்காலிபுரம், கோவிந்தபுரம்
புரி -
தருமபுரி, அழகாபுரி, மருங்காபுரி, மேலைச்சிவபுரி, சொர்ணபுரி, ரத்தினபுரி
மங்கலம் -
சத்தியமங்கலம், நீடாமங்கலம், ராஜசிங்க மங்கலம், புத்தாமங்கலம், சேந்தமங்கலம், ஆனைமங்கலம், சாத்தமங்கலம், கொத்தமங்கலம், திருமங்கலம், நந்திமங்கலம், அரியமங்கலம், மறவமங்கலம், மன்னாடிமங்கலம், மாதிரிமங்கலம், கண்டமங்கலம், ஹரித்துவாரமங்கலம்
ஈஸ்வரம் -
ராமேஸ்வரம், பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம், சோழீஸ்வரம், எமனேஸ்வரம், நித்தீஸ்வரம், சோமேஸ்வரம், அகத்தீஸ்வரம், திருக்கண்டீஸ்வரம்
துறை -
மயிலாடுதுறை, திருப்பெருந்துறை, ஆடுதுறை, கூடுதுறை, மாந்துறை, சிந்துபூந்துறை, அவல்பூந்துறை, செந்துறை, முண்டந்துறை
பாடி -
திருமழபாடி, தரங்கம்பாடி, வாணியம்பாடி, குறிஞ்சிப்பாடி, வியாசர்பாடி, திருமுனைப்பாடி, எடப்பாடி, வாழப்பாடி, கவுந்தப்பாடி, வேலப்பாடி
சேரி -
புதுச்சேரி, வேளச்சேரி, கொரடாச்சேரி, கூடுவாஞ்சேரி, மேச்சேரி, நல்லிச்சேரி, செம்மஞ்சேரி, திருமணஞ்சேரி
குப்பம் -
நெல்லிக்குப்பம், மேட்டுக்குப்பம், ஆற்காடு குப்பம், மேல்குப்பம், கீழக் குப்பம், திருமலைக்குப்பம், நெடுங்குப்பம், கோட்டைக்குப்பம், அரியாங்குப்பம், செட்டிக்குப்பம், ஆலங்குப்பம்
பேட்டை -
உளுந்தூர்பேட்டை, உடுமலைப்பேட்டை, ராணிப்பேட்டை, பரங்கிப்பேட்டை, முத்துப்பேட்டை, அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, விஷ்ணம்பேட்டை, கம்பரசம்பேட்டை, சோமரசம்பேட்டை
பட்டு -
செங்கல்பட்டு, சேத்துப்பட்டு, பேர்ணாம்பட்டு, அத்திப்பட்டு, பள்ளிப்பட்டு, அரசம்பட்டு, மூங்கில்பட்டு
தோப்பு -
சேத்தியாதோப்பு, சிங்காரத் தோப்பு, கொண்டித்தோப்பு, நெல்லித்தோப்பு, புளியந்தோப்பு
சோலை -
பழமுதிர்ச்சோலை, மாஞ்சோலை, பூஞ்சோலை, திருமாலிருஞ்சோலை
வனம் -
திண்டிவனம், திருப்புவனம், கடம்பவனம், தில்லைவனம்
சமுத்திரம் -
அம்பாசமுத்திரம், கோபாலசமுத்திரம், மல்லசமுத்திரம், நமனசமுத்திரம், பாலசமுத்திரம், திம்மசமுத்திரம், திருமலைசமுத்திரம், வேங்கடசமுத்திரம், ரவணசமுத்திரம்
ஆறு -
திருவையாறு, திருநள்ளாறு, அடையாறு, தெள்ளாறு, திருவட்டாறு, ஆழியாறு, மூணாறு
கரை -
நீலாங்கரை, கோடியக்கரை, ஊத்தங்கரை, அமைந்தகரை, திருவக்கரை, கும்பக்கரை, மதுக்கரை, கீழக்கரை
ஏரி -
நாங்குநேரி, வரகனேரி, பாகனேரி, வேப்பேரி, கடங்கனேரி, புத்தனேரி, மாறநேரி, பழமானேரி
ஊரணி -
பேராவூரணி, கருப்பாயி ஊரணி, கல்லூரணி
கேணி-
திருவல்லிக்கேணி, வெட்டுவான் கேணி
மடை -
பத்தமடை, காரமடை, மேலமடை, கடைமடை, பாலமடை, பன்னீர்மடை
வலம்-
புலிவலம், வேட்டவலம்
வளவு -
மேல வளவு, கீழ வளவு
வலசு -
பெரிய வலசு, பாப்பா வலசு, சின்ன கவுண்டன் வலசு
தெரு -
தெற்குத் தெரு, புதுத்தெரு
கிராமம் -
சாலிகிராமம், புதுக் கிராமம்
கோணம் -
கும்பகோணம், அரக்கோணம்
பூண்டி -
பூண்டி, திருத்துறைப்பூண்டி, திருமுருகன்பூண்டி, கும்மிடிப்பூண்டி, கணியம்பூண்டி
பந்தல் -
மன்னம்பந்தல், தண்ணீர்ப்பந்தல்
கூடல் -
நான்மாடக்கூடல், முக்கூடல்
ஏந்தல் -
கொம்புக்காரனேந்தல், லாடனேந்தல், முத்தனேந்தல் , வடக்கனந்தல்,
வாயில் -
திருமுல்லைவாயில், குடவாயில், காளவாசல், சித்தன்னவாசல்
நாடு -
வருசநாடு, கொரநாடு
கால் -
காரைக்கால், மணக்கால், தைக்கால்
கல் -
நாமக்கல், திண்டுக்கல், ஒகேனக்கல், பெருமுக்கல், நீலக்கல், பழமுக்கல்
சுழி -
திருச்சுழி, திருவலஞ்சுழி
மடம் -
ஆண்டிமடம், அக்காள்மடம், தங்கச்சிமடம்
சத்திரம் -
கனகம்மாசத்திரம், சுங்குவார்சத்திரம், ரெட்டியார்சத்திரம், சேதுபாவாசத்திரம், பாவூர்சத்திரம்
'திரு' என்னும் சொல் கொண்டு தொடங்கும் பெயர்களோ கணக்கில் அடங்கா. அதனால், அவற்றை எல்லாம் நான் இங்கே குறிப்பிடவில்லை.
என்ன நண்பர்களே, படிக்கச் சுவையாக இருக்கிறதா?
படித்ததில் பிடித்தது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.