*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*
*நாள்: 01.11.2023*
***********************
*EMIS பதிவேற்றப் பணி!*
*டிட்டோஜாக் தீர்மானத்தைச் செயல்படுத்துவோம்!*
*ஜாக்டோஜியோ ஆர்ப்பாட்டத்த வெற்றிகரமாக்குவோம்!*
***********************
*தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்) 30அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 13.10.2023ல் மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து 12.10.2023 அன்று மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 கோரிக்கைகள் ஏற்பு செய்யப்பட்டது.*
*ஏற்பு செய்யப்பட்ட அக்கோரிக்கைகளில் முதல் கோரிக்கை "EMIS பதிவேற்றம் செய்யும் பணிகளிலிருந்து இன்று(01.11.2023) முதல் ஆசிரியர்களை விடுவிப்பது என்பதாகும். ஆனால்,இன்று வரை கல்வித்துறை இது தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே,27.10.2023 அன்று நடைபெற்ற டிட்டோ ஜாக்கின் காணொளி வழி மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், பேச்சுவார்த்தையில் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு. இயக்குநர் பெருமக்களும் ஏற்றுக்கொண்டவாறு "01.11.2023 முதல் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் EMISல் ஆசிரியர் வருகைப் பதிவு மற்றும் மாணவர் வருகைப் பதிவு தவிர ஆசிரியர்களின் கற்பித்தல் நேரத்தை முழுமையாகப் பாதிக்கக்கூடிய, மாணவர்களின் கல்வி நலனைப் பாதிக்கக் கூடிய எவ்விதமான புள்ளி விவரங்களையும் பதிவேற்றம் செய்வதில்லை" என்ற முடிவை எடுத்துள்ளது. அத்தீர்மான நகல் மற்றும் உயர் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டிட்டோஜாக்கின் இணைப்புச் சங்கமாகிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் டிட்டோஜாக்கின் முடிவை நெஞ்சுறுதியோடும், நேர்மைத் திறத்தோடும் செயல்படுத்துமாறு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
*அதேபோல் இன்று(01.11.2023) நடைபெறும் ஜாக்டோஜியோவின் மாவட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டத்தில் நம் பேரியக்கத் தோழர்கள் முதற்படையாய், முன்னணிப் படையாய் களத்தில் நின்று போர்ப்பதாகையை உயர்த்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் எழுச்சிமிகு நம் இயக்கத் தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.*
***********************
*புரட்சிகர வாழ்த்துக்களுடன்* *ச.மயில்*
*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.