1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET தேர்வு முடிவு வெளியீடு?

 _

*பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது*



அனைவருக்கும் வணக்கம்:


இன்னும் சில நிமிடங்களில் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வில் கருணை மதிப்பெண் மற்றும் பொதுப் பிரிவினருக்கு 75 ஆக தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும்


ஆகிய வழக்குகள் விசாரிக்கப்பட இருக்கின்றன. 


_*இன்று காலையிலேயே அரசு தரப்பில் இவ்விரண்டு வழக்குகளையும் முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை ஏற்று நீதிமன்றம் விசாரிக்கிறது.*


கருணை மதிப்பெண் வழங்குவது குறித்த முடிவு எட்டப்படாவிட்டால், வழக்கை நிலுவையில் வைத்துக் கொண்டு அவ்வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஆட்சேபணை இல்லை என்பதை தெரிவிக்க இருக்கிறோம்.


எனவே சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான தடையாணை இன்றே நீக்கப்பட்டு முடிவுகள் இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கலாம்!


*வழக்கு சார்ந்த 3 முக்கிய தகவல்கள்:-*


1.பணியிட மாறுதல் கலந்தாய்வு:

பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.

மாறுதல் கலந்தாய்வுக்கான தடை தொடர்கிறது. அவ்வழக்கு வரும் 14.10.2026 அன்று விசாரிக்கப்பட இருக்கிறது.

2.சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு:

சிறப்பு TET தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. எனவே, முடிவுகளை வெளியிடுவதற்கான வழி தற்போது ஏற்பட்டுள்ளது.

3.ஆண்டுவாரியான பதவி உயர்வு:

ஆண்டுவாரியான பேனல் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கு, இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்பு நாளை முழுமையான விசாரணைக்கு வர உள்ளது.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags