பொது தேர்வு எழுதும் மாணவர்கள் இதன் படி செய்தால் போதும் ..வெற்றி நிச்சயம்
10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொது தேர்வு வர இருப்பதால் தேர்வை எப்படி கையாள்வது குறித்து பார்க்கலாம்.
பொதுத் தேர்வு என்ற உடன் மாணவர்களுக்கு பயமும் பதற்றமும் இருப்பது இயல்பு . தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை மிக எளிதாக எதிர்க்கொள்வது அவசியம்.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கக்கூடும். கல்வி என்பது அறிவையும் வாழ்வையும் மேம்படுத்திக் கொள்ள உதவும் ஒரு கருவியாக பயன்படுத்திகொள்ள வேண்டும் என்பதனை முதலில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
தேர்வு நேரத்தில் அதிக படியான மன உளைச்சலுக்கு ஆளாகாமல் தெளிவான மனதுடன் படித்தல் வேண்டும்.. தேர்வு நேரத்தின் போது இரவு கண்விழித்து படிப்பது , தேர்வு பயத்தினால் தூங்காமல் இருப்பது போன்ற செயல்களை செய்ய கூடாது. நியாபக சக்திக்கு தூக்கம் மிகவும் அவசியம்.

தூங்காமல் இருந்தால் தேர்வு எழுதும் போது உடல் சோர்வு அடைந்து மூளை விறு விறுப்பாக செயல்படாமல், படித்த பாடமும் மறக்கும் நிலை ஏற்படும்.
அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டும் .. முன்பு படித்ததை ஒரு முறை காலை revision செய்து விட்டு மீண்டும் படிக்க துவங்கலாம்.. தேர்வுக்கு செல்லும் போது சாப்பிட்டு செல்வது அவசியம், சாப்பிட்டால் தான் உடலுக்கும் மூளைக்கும் வலு ஏற்படும் ..
தேர்வு அறைக்குள் செல்லும் கடைசி நிமிடம் வரை புத்தகத்தை புரட்டி புரட்டி பார்த்து படிப்பது எந்த விதத்திலும் பலனளிக்காது..கடைசி 20 நிமிடம் மனதை பதற்றத்திற்கு கொண்டு செல்லாமல் அமைதியாக இருத்தல் வேண்டும்.

தேர்வு எழுதும் போது சில கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் அதை மட்டுமே யோசித்து கொண்டு நேரத்தை கடக்க கூடாது. நன்றாக தெரிந்த பதில்களையெல்லாம் எழுதிவிட்டு பின்பு தெரியாத பதில்களை பற்றி யோசித்து எழுதுவது நல்லது..
தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவுடன் சரியான பதில்களை தேடுவதை தவிர்த்தல் வேண்டும். தேர்வில் ஏதெனும் தவறான பதில்களை எழுதி இருந்தாலும் அவைகளை பற்றி கவலைப்படாமல் அடுத்த தேர்வுக்கு தயாராகுவது அவசியம்.

தேர்வு முடித்து வீட்டிற்கு வந்தவுடன் மீண்டும் புத்தகத்தை எடுத்து படிக்காமல் சிறிது நேரம் ஓய்வு எடுத்தப் பின்பு மீண்டும் படிக்க துவங்குவது நல்லது.
பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதிகப்படியான அழுத்ததை கொடுக்காமல் அவர்களை சுதந்திரமாக படிக்கவிடுங்கள். முக்கியமாக மற்றொரு மாணவர்களோடு ஒப்பிட்டு பேசி அவர்களை புண்படுத்தாதீர்கள். தேர்வு ஒருநாளும் அவர்களின் திறமைகளை அளக்கும் அளவுக்கோள் கிடையாது. குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்த பெற்றோர்கள் நண்பர்களாக பழகவேண்டும் என்பதே நிதர்சனம்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.