தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக்கப்பட்டது குறித்த அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த, தமிழக அசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இதற்கான அவசர சட்டம் அரசிதழில் நேற்று வெளியானது.
இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சியாக்கப்பட்ட சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் மற்றும் செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை மற்றும் திருநீர்மலை பேரூராட்சிகள் மற்றும், 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக, அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தாம்பரம் 20வது மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.