1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

இடி, மின்னலின்போது செய்ய வேண்டிய, செய்யக் கூடாத பாதுகாப்பு முறைகள்*

*🌎🌧️இடி, மின்னலின்போது செய்ய வேண்டிய, செய்யக் கூடாத பாதுகாப்பு முறைகள்*


*வீட்டில் இருக்கும்போது செய்யக்கூடியவை*

1) இருண்ட கருமேகங்களையும், அதிகப்படியான காற்றினையும் கவனிக்க வேண்டும்.

2) இடியின் சப்தத்தை நீங்கள் கேட்டால், மின்னல் தாக்கும் இடத்தின் அருகில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

3) இடி மற்றும் மின்னல் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களுக்கு ஊடகங்களை தொடர்ந்து கவனிக்கவும்.

4) வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும், முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் வீட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

5) ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும் மற்றும் வெளியில் உள்ள பொருட்களை (தளவாடங்கள், தொட்டிகள் முதலியன) பாதுகாப்பாக வைக்கவும்.

6) கால்நடைகள் உட்புறம் இருப்பதை உறுதி செய்ய
ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, அவசியமற்ற மின்சாதனங்களின் இணைப்பை துண்டிக்க வேண்டும். இடி மற்றும் மின்னல் தாக்கத்தின் போது பொருட்கள் வீசி எறியப்பட்டு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மரக்கட்டைகள், இடிந்த சிதிலங்கள், தேவையற்ற பொருட்கள் இருப்பின் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.

*8) மின்னல் தாக்கத்தின் போது தொலைபேசி, மின் சாதனங்கள், கம்பி வேலிகள், மரங்கள், மலை உச்சி ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும்போது செய்யக்கூடாதவை*

1) தரையில் சமமாக படுக்கும் போது மின்னலின்
தாக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால்,
தரையில் சமமாக படுக்கக்கூடாது.

2) இடி மற்றும் மின்னல் தாக்கத்தின் போது மரங்களில் மின்சாரம் பாயும் என்பதால் மரங்களுக்கு அடியில் நிற்க கூடாது.

3) ரப்பர் செருப்புகள் மற்றும் கார் டயர்கள் மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உதவாது என்பதால் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.

*பயணம் மேற்கொள்ளும் போது செய்யக்கூடியவை*

1) சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் வேளான் வாகனங்களில் பயணிக்கும் போது உடனடியாக பாதுகாப்பான தங்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

2) படகு சவாரி மற்றும் நீச்சல் மேற்கொள்ளும் போது மின்னல் தாக்கம் ஏற்படின் உடனடியாக கரைக்குத் திரும்பி பாதுகாப்பான தங்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

3) புயலின் தாக்கத்தின் போது மீட்பு உதவி கிடைக்கும் வரை அல்லது புயல் கடந்து செல்லும் வரை உங்களது வாகனத்திலேயே இருக்க வேண்டும்.வாகனத்தில் உள்ள உலோக பாகங்களை நீங்கள் தொடாமல் இருந்தால் உங்கள் வாகனத்தின் உலோக கூரை உங்களுக்கு பாதுகாப்பாக அமையும்.

4) வாகனங்களில் ஜன்னல்களை மூடி வைக்கவும். மரங்கள் மற்றும் மின் இணைப்புகளில் அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

*செய்யக்கூடாதவை*

1)உலோக குழாய்களில் மின்னல் பாயும் என்பதால், இடிமற்றும் மின்னல் தாக்கத்தின் போது குளிப்பதை தவிர்க்கவும். மேலும் ஓடும் நீரோடைகளிலிருந்து இருந்து விலகி இருக்கவும்.

2) கதவுகள், ஜன்னல்கள், நெருப்பு மூட்டப்படும் இடங்கள், அடுப்புகள், குளியல் தொட்டிகள் மற்றும் மின்சாரம் பாயும் பொருட்களிலிருந்து விலகி இருக்கவும்.

*வெளியில் இருக்கும் போது செய்யக்கூடியவை*

1) உடனடியாக பாதுகாப்பான தங்குமிடத்திற்கு செல்ல வேண்டும். உலோகக் கட்டமைப்புகளையும் கட்டுமானங்களையும், உலோகத் தகடு கொண்ட தங்குமிடங்களையும் தவிர்க்கவும்.

2) தாழ்வான பகுதியில் உள்ள தங்குமிடத்தை
கண்டறிவதோடு, அந்த இடம் வெள்ளப் பாதிப்புக்கு
உள்ளாகாத இடம் என்பதை உறுதி செய்துகொண்டு
அந்த இடத்தில் தங்க வேண்டும். 3) குதிகால்களை ஒன்று சேர்த்து, தலை குனிந்து தரையில் பதுங்குவது போல அமர்ந்து கொள்ள வேண்டும்.

4) உங்களது கழுத்திற்கு பின்னால் இருக்கும் முடியில் நீங்கள் ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் மின்னலின் தாக்கம் உடனடியாக நிகழப்போகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

சிகிச்சை

1) மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் இயன்றவரை அடிப்படையான முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.

2) மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நபரது உடலில் மின்சாரம் இருக்காது என்பதால், காலம் தாழ்த்தாமல் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

3) மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நபருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதையும் செவித்திறன் மற்றும் கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளனவா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

4) மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நபருக்கு தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்னல் தாக்கத்திற்கு உள்ளான அவரது உடலில் எந்த பகுதியில் மின் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதையும், காயத்திற்கான அடையாளங்கள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டும்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags