தொடர் கனமழையால் சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோரமாவட்டங்களில் மின்தடை, வீடுகளில் வெள்ளநீர் புகுதல் போன்றசிக்கல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் ஆன்லைன்வகுப்புகளில் பங்கேற்க சில தனியார் பள்ளிகள், மாணவர்களை நிர்பந்திப்பதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து மழைக்காலங்களின்போது ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க மாணவர்களை, பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பருவமழை தீவிரத்தால் கடலோர மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, நடைமுறைசிக்கல்களைக் கருத்தில் கொண்டு மழை பாதிப்புள்ள பகுதிகளில் இயங்கும் பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக விடுமுறை வழங்க வேண்டும். ஆன்லைனில் பாடம்,தேர்வுகள் நடத்தினாலும் மாணவர்கள் பங்கேற்க நிர்பந்திக்க கூடாது.
வீட்டுப்பாடம் உட்பட இதர கற்றல் பணிகளையும் வழங்கக்கூடாது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் வாயிலாகதனியார் பள்ளிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.