செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த பெரிய செய்தி தகவலை வெளியிட்டுள்ளது. இனி SBI வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்குக் குறிப்பிட்ட சில விதிகளைப் பின்பற்றிய பின்னர் மட்டுமே பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SBI அறிவித்துள்ள இந்த புதிய விதியின் படி மக்கள் எப்படிச் செயல்படவேண்டும் என்றும், இந்த விதி எப்போதெல்லாம் செயல்பாட்டில் இருக்கும் என்பது போன்ற தகவலைத் தெளிவாகப் பார்க்கலாம்.
எஸ்பிஐ புதிய விதி என்ன சொல்கிறது?
உங்களிடம் பாரத ஸ்டேட் ஆப் இந்தியா வங்கியில் (எஸ்பிஐ) சொந்தமாகக் கணக்கு இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில் எஸ்பிஐ தனது ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றம் செய்ய, சில புதிய விதிகளை அமல்படுத்தி நாட்டில் மிகப் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் படி, இனி SBI வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கும் போது, நீங்கள் எந்த பிரச்சனையும் சந்திக்காமல் பாதுகாப்பாக உங்கள் பரிவர்த்தனையை மேற்கொள்ளக் கீழே கொடுப்பட்டுள்ள இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.
உண்மையில், SBI இன் சேவை கணக்கு அல்லது அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களும் இந்த விதி பொருந்தும். இதன் படி, இனி நீங்கள் ATM மையங்களில் இருந்து பணத்தை எடுக்கும் போது, ஒரு முறை பாஸ்வோர்ட் ஆன OTP பாதுகாப்பு எண்களைப் பயன்படுத்த வேண்டும். இந்த OTP எண்களை பயன்படுத்தினால் மட்டுமே ATM-ல் இருந்து இனி பணம் எடுக்க முடியும் என்று SBI வங்கி முடிவு செய்துள்ளது. இனி நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போதெல்லாம், OTP கட்டாயம் தேவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இனி நீங்கள் SBI ATM மையங்களுக்கு சென்று உங்கள் கணக்கில் இருந்து பணத்தை ரொக்கமாக எடுக்க முயலும் போது, வங்கி முதலில் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP ஐ அனுப்பும். வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு மட்டும் இந்த ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட OTP எண்களை சரியாக ATM இயந்திரத்தில் உள்ளிட்ட பிறகுதான் இனி உங்களால் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எடுக்க முடியும்.
இந்த அதிகாரப்பூர்வ தகவலை எஸ்பிஐ வங்கி தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் ட்வீட் செய்துள்ளது. அந்த ட்வீட்டில் வங்கி, 'எஸ்பிஐ ஏடிஎம்களில் பரிவர்த்தனைகளுக்கான OTP அடிப்படையிலான பணத்தை எடுக்கும் முறையானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை பெறும் முறையானது மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகும். மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே வங்கியின் முதன்மையான பணியாகும்' என்று பதிவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.