1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

பிப்.,6 ல் திருமணம் செய்யும் ஜோடி மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பிற்கு ஏற்பாடு

பிப்.,6 ல் திருமணம் செய்யும் ஜோடி மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பிற்கு ஏற்பாடு

ஓசூர் அருகே, பிப்., 6 ல் திருமணம் செய்யும் ஜோடி, இந்தியாவிலேயே முதல்
முறையாக மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அஞ்செட்டி தாலுகா, சிவலிங்கபுரத்தைசேர்ந்தவர் ராமசாமி மகள் ஜனகநந்தினி, 23. பி.டெக் பட்டதாரியான இவர்,சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; தனது மகள்ஜனகநந்தினிக்கும், சென்னை பெரம்பூரை சேர்ந்த ஐ.ஐ.டி.,யில் புராஜெக்ட்அசோசியேட்டாக பணியாற்றி வரும் பி.டெக் பட்டதாரி தினேஷ், 25,என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க ராமசாமி ஏற்பாடு செய்தார். ஆனால் அதற்குள் கடந்த ஏப்., மாதம் அவர் உயிரிழந்தார். தனது தந்தை பார்த்துவைத்த மணமகனை மணக்க ஜனகநந்தினி முன்வந்தார்; அதற்கு மணமகன் தினேஷ்சம்மதம் தெரிவித்தார். இதனால் கடந்தாண்டு நவ. 8 ல், சிவலிங்கபுரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. சமீபத்தில் உயிரிழந்த தனது தந்தை ராமசாமிதலைமையில் திருமணம் நடக்க வேண்டும் என, மணமகள் ஜனகநந்தினி ஆசைப்பட்டார்.



இதனால் வரும் பிப்., 6 ல் திருமணம் நடந்த பின், மெட்டாவெர்ஸ் முறையில்திருமண வரவேற்பு நடத்த மணமகன் தினேஷ் முடிவு செய்துள்ளார். மெட்டாவெர்ஸ்என்பது இயற்கை, டிஜிட்டல் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப் படும் மெய்நிகர் உலகம். இதில் நுழைபவர்கள் எல்லாரும் டிஜிட்டல்அவதாரம் எடுப்பார்கள்.
வரும் பிப்., 6 ல், திருமணம் முடிந்த பின், மணமக்கள் இருவரும்லேப்டாப்களை திறந்து லிங்கை ஷேர் செய்த பின், அந்த லிங் மூலம் திருமணவரவேற்பில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் டிஜிட்டர் அவதாரமாக பங்கேற்கலாம்.  ஹேரி பாட்டர் படங்களில் வரும் மேஜிக் உலகமான ஹாக்வார்ட்ஸ் மாளிகையில் திருமண வரவேற்பு நடக்கும். இதற்கு மணமகளின் தந்தையான மறைந்த ராமசாமியின் டிஜிட்டல் அவதாரம் தலைமை வகிக்கும். மணமக்களின் டிஜிட்டல்அவதாரங்கள் விருந்தினர்களை வரவேற்கும். விருந்தினர்களும் டிஜிட்டல்அவதாரங்களாக வந்து, மணமக்களை ஆசிர்வதிப்பார்கள்.
 
இந்த டிஜிட்டல் அவதாரத்தில், மணமகள் ஜனகநந்தினி, மணமகன் தினேஷ், மணமகளின் தந்தை ராமசாமி ஆகியோரது டிஜிட்டல் அவதாரம் தத்ரூபமாக அவர்களை போன்றே
வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் முதல்முறையாக நடக்கும் மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags