lமாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்ற, 16 பேர் மீண்டும் தலைமையாசிரியர் பணிக்கு செல்ல பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதற்கு, அதிருப்தி கிளம்பியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ், 2021 பிப்., மாதம், 26 தலைமையாசிரியர்களுக்குமாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி., நேரடி தேர்வு வாயிலாக தகுதி பெற்று பயிற்சி முடித்தவர்களுக்கு பதவி வழங்கவேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து, பதவி உயர்வு பெற்றதில், 16 பேரை மீண்டும் பழைய பணிக்கு செல்ல தற்போது கூறப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,'பதவி உயர்வு வழங்கும் போது ஓய்வு பெறுபவர்களின் வயது, 59 ஆக இருந்தது. அதன் பின், பணி ஓய்வு வயது 60 ஆக அரசு உயர்த்தியது. இதனால், ஏற்பட்ட குழப்பம் காரணமாக டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தகுதி பெற்றவர்களை மாவட்ட கல்வி அதிகாரிகளாக அமர்த்த காலியிடம் இல்லாமல் போனது. அவர்களுக்கு பதவி வழங்க, 16 பேரின் பதவியை பறிப்பது நியாயமில்லை. வரும் மே மாதம், 20 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணி ஓய்வு பெறுகின்றனர். அதுவரை, நேரடி நியமனம் பெறுபவர்களுக்கு மாற்று பொறுப்பு வழங்கவேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.