1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

எண்ணும் எழுத்தும் வகுப்பு சந்தேகங்களுக்கு13.8.2022 நடந்த VIDEO CHATல் தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு முனைவர் திரு.அறிவொளி அவர்கள் மற்றும் SCERT இணை இயக்குநர் மதிப்புமிகு திருமதி.ஸ்ரீதேவி அவர்கள் அளித்த பதிலுரைகள்....*

 *🔰📌 நேற்று மாலை TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குனருடன் VIDEO CHAT  ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில் கலந்துரையாடலில் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு முனைவர் திரு.அறிவொளி அவர்கள் மற்றும் SCERT இணை இயக்குனர் மதிப்புமிகு  திருமதி.ஸ்ரீதேவி  அவர்கள் அளித்த பதிலுரைகள்....*



👇👇👇👇👇👇👇👇👇👇👇



🔰 கேள்வி 1 : *எண்ணும் எழுத்தும் வகுப்பு ஆசிரியர்கள் என்னென்ன பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்?  மண்டல ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் 10 பதிவேடுகள் உள்ளடக்கிய CHECK LIST  வைத்திருந்து அதில் உள்ள பதிவேடுகள் உள்ளதா என்று கேட்கிறார்கள்?.*



📌 *மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:*

 பாடக்குறிப்பு மட்டும் எழுதினால் போதும். அதற்கும் ஒரு Format வெளியிட்டுள்ளோம்.. ஆகவே அதை மட்டும் fill செய்தால் போதும்..  மற்ற WORK DONE ,  ACHIEVEMENT CHART,  LEARNING OUTCOMES RECORD , C&D GRADE REGISTER என எதுவும் தேவையில்லை..  அதிகாரிகள் தவறான புரிதலில் உள்ளார்கள்.. இது குறித்து ஆசிரியர்களிடம் இருந்து நிறைய புகார்கள் வந்துள்ளதால் விரைவில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கின்றோம்..

 

🔰 கேள்வி 2 : 

*எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு TLM தயாரிக்க அதிக செலவாகிறது..  ஆகவே TLM தயாரிக்க நிதி ஒதுக்கி அதிலிருந்து ஆசிரியர்களுக்கு நிதி கொடுத்தால் நாங்கள் TLM செய்வதற்கு மிக உதவியாக இருக்கும்..*

 

🔰 *மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:*

 இதுவரை எவ்வளவு செலவழித்துள்ளீர்கள்..? 

📌 *ஆசிரியர்:*

 2500₹


📌 *மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:*

 எண்ணும் எழுத்தும் திட்டம் வந்த பிறகு தான் TLM க்கு செலவாகிறது என்று தொடர்ந்து ஆசிரியர்கள் புலம்புகிறீர்களே... அப்போ இதற்கு முன் TLM இல்லாமல் தான் வகுப்பறைக்கு சென்றுள்ளீர்களா...? TLM இல்லாமல் வகுப்பறைக்கு செல்லக்கூடாது என்று ஆசிரியர்களாகிய உங்களுக்கு தெரியாதா.. ? B. Ed. & D. T. Ed., பயிற்சியில் எதற்காக TLM தயாரிக்க கற்றுக் கொடுத்தார்கள்..  அதெல்லாம் பயிற்சியோடு முடிந்துவிட்டதா..  மூன்று மாதங்களுக்கு ₹.2500 செலவழிக்க மாட்டீர்களா.. உங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் TLM தயாரிப்பதற்கும் சேர்த்து தான்..  இது செலவில்லை.. INVESTMENT..  நாம் எப்படி கல்வி கற்று வந்தோம்.. என்னுடைய அறிவியல் ஆசிரியர் பல்வேறு விதமான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளைக் கொண்டு கற்பித்தார்..  அவரைப் போன்ற ஆசிரியர்களால் தான் நான் இன்று இந்த பதவியில் இருக்கிறேன்.. நீங்களும் அது போன்ற ஆசிரியர்களிடம் பயின்றதால் தான் இன்று இந்த பணியில் உள்ளீர்கள்.. ஆகவே TLM தயாரிப்பதை செலவாக கருததீர்கள்.. நானும் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி நிதி ஒதுக்குவது குறித்து பேசுகிறேன்.


📌 *SCERT JD Madam:* 

பல கோடிகள் ஒதுக்கீடு செய்து எண்ணும் எழுத்தும் KIT  கொடுத்துள்ளோம்.. ஆசிரியர்கள் அதை பயன்படுத்துங்கள்.. TLM  என்றால் கடையில் விற்கும் chart உள்ளிட்ட பொருள்களை வாங்கி தயாரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..  

Real objects பயன்படுத்துங்கள்..  நான் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது ஒரு ஆசிரியர் வகுப்பறையில் Jasmine படத்தை chartல் வரைந்து ஒட்டியுள்ளார்.. 

இது வீண் செலவு இல்லையா.. நீங்கள் Jasmine  காண்பிக்க விரும்பினால் சிறிது பூக்களை எடுத்துச் சென்று காண்பியுங்கள்.. முடிந்த வரை Real Objects எடுத்து செல்லுங்கள் LOW COST MATERIAL உபயோகியுங்கள்.. 



🔰 கேள்வி 3: 

*உண்மைப் பொருள்களை எடுத்து சென்றால் அதை அன்றைய வகுப்பறையில் மட்டும் பயன்படுத்திவிட்டு எடுத்து விடுவோம்..  பார்வையிட அதிகாரிகள் வரும் போது வகுப்பறையில் TLM இருக்காதே..  அப்பொழுது நாங்கள் என்ன செய்வது?*


📌 *SCERT JD Madam:* உங்களது பாடக் குறிப்பில் துணைக்கருவிகள் தலைப்பில் உண்மை மாதிரிகள் என்று குறிப்பிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.. அதிகாரிகளிடம் அதைக் காண்பித்தால் போதுமானது.. நீங்கள் உண்மையிலேயே பயன்படுத்தி இருந்தால் அவர்கள் குழந்தைகளிடம் விசாரிப்பார்கள்.. குழந்தைகள் பொய் கூற மாட்டார்கள்.. 


🔰 கேள்வி 4:  

*பாடல் களத்தில் பாடல்களை எல்லாம் எழுதி வைக்க வேண்டுமா?  பாடல்களை நாங்கள் கற்றுக் கொடுக்க போகிறோம் பின்பு எதற்கு பாடலை Chart ல் எழுதி வைக்க வேண்டும்?* 


📌 *SCERT JD Madam :*

  மீண்டும் மீண்டும் ஆசிரியர்கள் இதையே தான் கேட்கிறீர்கள்.. பாடல் களத்தில் எவ்வளவு பொருள்கள் வைக்க வேண்டியுள்ளது... கதைக் களத்தில் என்ன வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் களங்களை நிரப்புவதில் தான் பதற்றமடைகிறீர்கள்..  களங்கள் என்பது மாணவனை Motivate செய்வதற்கு..  பாடல் களத்துக்கு நீங்கள் சென்று டம்மி மைக் எடுத்தால் மாணவன் மிகுந்த மகிழ்ச்சி ஆகி விடுவான் ... ஐ ஆசிரியர் பாடல் பாட போகிறார் என்று...  அவன் மிகுந்த மகிழ்வுடன் பாடலை பாட முன் வருவான். கதை களத்தில் ஒரு Mask ஐ கொடுக்கும்போது அதை மாட்டிக்கொண்டு அவன் மகிழ்ச்சியுடன் அந்த விலங்காகவே தன்னை நினைத்து கதையை கூறுகிறான்..  

இவ்வளவு தான் நமக்கு தேவை..  

களங்கள் என்பது மாணவர்களுக்கு ஒரு Motivation காக மட்டுமே..  ஆகவே பாடல்களை எழுதி ஒட்ட வேண்டியதில்லை.. 



🔰 கேள்வி 5:

 *ஒரு ஆசிரியையின் பள்ளிக்கு இரண்டு தினங்களுக்கு முன் BEO பார்வையிட சென்றுள்ளார்.. அவர்கள் வகுப்பறையில் உள்ள சுவற்றில் 70% Fill பண்ணியுள்ளார்..  அதைப் பார்த்த BEO இது பத்தாது ஆகவே அவர்கள் வகுப்பறைக்கு அருகில் உள்ள LKG & UKG வகுப்பறை  சுவற்றையும் நிரப்பி வையுங்கள் என்று கூறியுள்ளார்..  தற்போதைய பாடத்திற்கு தேவைப்படுவதை தாண்டி சுவற்றை மட்டும் நிரப்பி வைப்பது எப்படி சாத்தியமாகும்..?*


📌 *மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:*

 நீங்கள் Polite ஆக அந்த BEO விடம் என்ன மாதிரி ஒட்டலாம் என்று கூறுங்கள் என்று கேளுங்கள்..  

அவர்கள் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக சென்று விடுவார்கள்..  ஏனெனில் அவர்களுக்கே இதைப் பற்றி தெரியாது..  என்னடா BEOs பத்தி நாங்களே இப்படி சொல்கிறோம் என்று நினைக்காதீர்கள்.. அவர்களுக்கு தற்போது தான் கொஞ்சமாக கொஞ்சமாக பயிற்சி கொடுக்கிறோம் நிறைய அலுவலர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லை..  நாங்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறோம்..  


🔰 கேள்வி 6 : 

*ஒரு தலைமை ஆசிரியரிடம் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள்  சந்தேகம் கேட்டுள்ளார்..  அது என்னவென்றால் மூன்றாம் வகுப்பில் உள்ள அரும்பு மாணவர்கள் அவர்களது பயிற்சி புத்தகத்தில் அரும்புக்கான செயல்பாடுகளை மட்டும் செய்வார்களா இல்லை அனைத்து செயல்பாடுகளும் செய்கின்றனரா?  என்று கேட்டுள்ளார்..  ஆகவே மூன்றாம் வகுப்பு அரும்பு மாணவர்கள் எந்த செயல்பாடு செய்ய வேண்டும்?*


📌 *SCERT JD Madam:* 

அரும்புக்கான செயல்பாடு மட்டும் செய்தால் போதுமானது.. எழுத்துக்களே அறியாதவன் தான் அரும்பு மாணவர்.. ஆகவே அவர்களுக்கு மலர் புத்தகத்தில் உள்ள அனைத்து செயல்பாடும் செய்ய வேண்டியதில்லை..  

*🔰📌மேலும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.*


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*1. முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பிற்கு கண்டிப்பாக வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது.*


*2. மூன்றாம் வகுப்பிற்கு மட்டும் வீட்டுப்பாடம் தரலாம்.*


*3.துணைக்கருவிகளுக்கான செலவுகள் ஆசிரியர்களை சார்ந்ததே.* (இயக்குநர் கருத்து)


*4. அடுத்த கல்வி ஆண்டில் "அமுதா ஆட்டுக்குட்டி பாடமே" பயின்றால் மாணவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் மாற்று ஏற்படுத்த திட்டம்.*


*5. பள்ளிகளில் வகுப்புகளை பகிர்ந்து தருவது தலைமை ஆசிரியர் பொறுப்பு. எக்காரணம் கொண்டும் 4,5 வகுப்புகளை இணைக்கக்கூடாது.*

 

*6.பாடக்குறிப்பு மற்றும் FA(B) PRINT OUT தவிர எண்ணும் எழுத்தும் வகுப்பில் வேறு பதிவேடுகள் பராமரிக்கத் தேவையில்லை என்பதை அனைத்து BEO அவர்களுக்கும் மெயில் அனுப்ப உள்ளார்கள்.* (இயக்குநர்).


*7 . நேற்று 1000பேர் மட்மே கலந்து கொண்ட கலந்துரையாடல் அடுத்தமுறை 5000பேர் கலந்துகொள்ள வேண்டும் என இயக்குநர் கேட்டுக்கொண்டார்.*


*8. தாங்கள் வகுப்பறையில் சிறப்பாக செய்யும் செயல்களை குழுவில் பதிவிடும்படி கூறினார்கள்.*


*9.பெற்றோர் ஆசிரியர் கூட்டமானது உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து EE வகுப்பறை உள்ள பள்ளிகளிலும் நடத்த வேண்டும் . அப்பொழுதுதான் பெற்றோர்களுக்கு மாணவர்களின் கற்றல் அடைவு புரியும் என்றனர்.*


*10. எண்ணும் எழுத்தும் தொடர்பான சந்தேகங்களை குழுவில் பதிவுசெய்யக் கூறினர்.*


நன்றி. 🙏


 *மேற்கண்ட கேள்விகளும் பதில்களும் அந்த VIDEO CHARTல் கலந்துரையாடப்பட்டது..*

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags