1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

வருமான வரி கணக்கீடு குறித்த விழிப்புணர்வு பதிவு

 


வருமான வரி கணக்கீடு குறித்த விழிப்புணர்வு பதிவு


இவ்வாண்டு வருமான வரி கணக்கிட நமக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

ஒன்று பழைய முறையில் வருமான வரி கணக்கிடுவது.

மற்றொன்று புதிய முறையில் வருமான வரி கணக்கிடுவது.

இதில் எது லாபமானது?

1. CPS ல் பணிபுரிந்து வருபவர்களின் ஆண்டு வருமானம் *ரூ. 10 லட்சம் முதல் 11 இலட்சம்* எனில் அவர்கள் புதிய முறையில் வருமான வரி கணக்கிடும் போது,

பழைய முறையை விட புதிய முறையில் சுமார் *4000 முதல் 5000* வரை குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.

2. இதேபோன்று, ஆண்டு வருமானம் 11 லட்சம் முதல் 12 லட்சம் வரை பெறுபவர்கள் புதிய வருமான வரி கணக்கீட்டு முறை முறையில்  8000 முதல் 11000 வரை*  குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.

3. இதே நிலையில் ஆண்டு வருமானம் 12 லட்சம் முதல் 13 லட்சம் வரை பெறுபவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் சுமார் 12,000 முதல் 15000 வரை குறைவாக வருமான வரி கட்டும் வாய்ப்பு வரும்.

4. ஆண்டு வருமானம் 13 லட்சம் முதல் 14 லட்சம் வரை பெறுபவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் சுமார் 20000 முதல் 23000 வரை வருமான வரி குறைய வாய்ப்பு உள்ளது.

5. ஆண்டு வருமானம் 15 லட்சம் ரூபாய் உள்ளவர்களுக்கு புதிய வருமான வரி கணக்கீட்டு முறையில் 30 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வரையும் வருமான வரி குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

6.  GPF முறையில் பணி நியமனம் பெற்றவர்கள் ஆண்டு வருமானம் 14 லட்சம் முதல் 15 லட்சம் என இருந்தால் அவர்களுக்கு சுமார் 40 ஆயிரம் வரை புதிய கணக்கீட்டு முறையில் வருமான  குறைய வாய்ப்பு உள்ளது.

7. எனவே, புதிய வருமான வரி கணக்கீட்டு படிவத்தையும் - பழைய வருமான வரி படிவத்தையும் ஒப்பிட்டு பார்த்து ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் புதிய வருமான வரி கணக்கீட்டு படிவத்தை (NEW TAX REGIME) தேர்ந்தெடுத்து நமக்கு எவ்வளவு வருமான வரி வரும் என்பதை இப்பொழுதே கணக்கிட்டு அதற்கேற்றவாறு தொகையினை பிடித்தம் செய்து கொள்ளுங்கள்

8. அதிகமான தொகையை நீங்கள் பிடித்தம் செய்தால் அதை திரும்பி வாங்குவது கடினமான ஒன்றாகிவிடும்.

9. ஏனெனில் நமக்கு ஏற்கனவே இன்கம் டேக்ஸ் டிமாண்ட் நோட்டீஸில் வருமான வரி அபராதத்துடன் கட்ட வேண்டும் என காட்டப்பட்டு உள்ளதால் அதிகமான தொகையை நீங்கள் பிடித்தும் செய்தால் அதை வருமான வரித்துறை   அதைப் பிடித்து வைத்துக் கொள்வார்கள்.

10. எனவே இப்பொழுதே திட்டமிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தயாராகுமாறு  அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

11.  வீட்டுக் கடன் பெற்று அதற்கு வட்டியாக ரூபாய் 2 லட்சம் செலுத்துபவர்களுக்கு பழைய வருமான வரி கணக்கீட்டு முறை பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்

12. எனவே வீட்டுக் கடன் வட்டியை கழிப்பவர்கள் இரண்டு முறைகளையும் பயன்படுத்தி அதாவது இரண்டு லட்சத்திற்கு கீழாக வட்டி கழிப்பவர்கள் இரண்டு முறைகளையும் பயன்படுத்தி,

எது குறைவாக வருகிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளவும்.

13.  ஆண்டு வருமானம் 7 லட்சம் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு இரண்டு முறைகளிலுமே வருமான வரி கட்டத் தேவையில்லை.

14. புதிய வருமான வரி கணக்கிட்டு படிவத்தின் படி,

50,000 STSNDARD DEDUCTION உண்டு.

மேலும்,

UPTO 3 LAKHS

  NIL TAX

3 LAKH TO 6 LAKH

      5%

6 LAKH TO 9 LAKH

     10%

9LAKH TO 12 LAKH

      15%

12 LAKH TO 15 LAKH

       20%

ABOVE 15 LAKH

     30 %

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags