*STUDENTS TC GENARATION REGARDING*
1) அனைத்து வகுப்புகளுக்கான TC GENERATION செய்து கொள்ளலாம்.
2) TC எடுப்பதற்கு முன்னர் Annual mark entry, Uniform Entry, Cycle Number updation, 7.5% Verification, CG work மற்றும் பிற பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம்.
3) TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.
4) தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
5) மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.
6) *தொடக்கப்பள்ளியாக இருந்தால் 5 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு TC GENERATION செய்து common pool க்கு அனுப்பும்போது Terminal class என்ற option யை தேர்ந்தெடுக்கவும். இதேபோல் நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு Terminal class என்று குறிப்பிடவும்*
Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் requested by parents என்பதினை தேர்வு செய்ய வேண்டும்.
7) மாணவர்களுக்கு online EMIS TC தான் வழங்கப்பட வேண்டும்.
8)ஒரு மாணவனுக்கு TC எடுக்கும் போது மூன்று முறை edit செய்து கொள்ளலாம். அதற்கு மேல் edit செய்ய இயலாது.
TC edit செய்வதற்கு reset வேண்டுமென்றால் மாணவனின் EMIS எண்ணை தங்கள் பள்ளியின் BRTE யிடம் தெரிவிக்கவும்.
*Steps*
School login _ students _
students TC details _ current students list _ select class & Section_
update TC details _ save & submit _
check past students list.
ஒரு மாணவனின் தகவலை முதலில், student list மூலம் சரி பார்த்த பின், பிழையிருந்தால் எடிட் ஆப்ஷன் மூலம் பிழையை சரி செய்த பின், ஒரு முறைக்கு இரண்டு முறை தகவல்களை சரிபார்த்த பின், Save தர வேண்டும்.
இதன் பின் TC Generation பகுதிக்கு சென்று மாணவன் தகவலை மீண்டும் சரி பார்த்து, அதன் பின் அங்க அடையாளங்கள் உள்ளிட்ட பிற விவரங்களை உள்ளீடு செய்து, Save Details தருவதற்கு முன்பு, மீண்டும் ஒரு முறை அனைத்தையும் சரிபார்த்து Save Details தரவும். Successfully என பச்சைக் கலரில் வலது பக்க மேல் பகுதியில் தகவல் கிடைத்த பின், மீண்டும், TC Generation பகுதிக்கு சென்று, தற்போது சரிபார்த்த மாணவனின் பெயருக்கு வலது புறம் உள்ள சிவப்பு அம்புக் குறியை அழுத்துவதன் மூலம், common pool க்கு அனுப்பும் ஆப்ஷன் தோன்றும்.
இதில்Terminal class தேர்வு செய்து Save கொடுத்தால், அந்த மாணவர் common pool சென்று விடுவார்.
இதன் பின், past students menu வில் சென்று, மாணவன் TC ஐ, Pdf வடிவில் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுக்கலாம். அல்லது Save செய்து, பிறகு பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஒவ்வொரு மாணவனுக்கும், TC முடித்த பின் தான், அடுத்த மாணவனுக்கு TC தயாரிப்புக்கான சரிபார்த்தல் பணியை தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவனுக்கும் உடனே TC Generate செய்யாமல், மொத்தமாக செய்யும் போது, தொழில் நுட்ப கோளாறு காரணமாக பிரச்சனைகள் வருகிறது.
கவனமாக செயல்பட்டால் பிழைகளை தவிர்க்கலாம்!
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.