தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு கல்வி நிதியை பெற வேண்டிய அவசியம் இல்லை” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு கல்வி நிதியை பெற வேண்டிய அவசியம் இல்லை. தேசிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு தங்களுடைய சித்தாந்தத்தை உள்ளே கொண்டு வருவதற்கு நினைக்கிறது. கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால் தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை, மாணவர்களிடம் அறிவு சார்ந்த விஷயங்களை கொண்டு செல்லும்போது, பேச்சாளர் மகாவிஷ்ணு போன்றவர்கள் மாணவர்களிடம் மூடநம்பிக்கைகளை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வியில் மதம் கலக்கக் கூடாது. பள்ளி நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இரண்டு நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்” என்று அவர் கூறினார்.
தயவுசெய்து உங்கள் நலனுக்காக எங்கள் வாழ்க்கை யில் விலையாடாதீர்கள்.
ReplyDelete