மத்திய பட்ஜெட் 2026 - விலை உயரும், விலை குறையும் பொருட்கள் எவை?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கத்தால் எந்தெந்த பொருட்கள் மலிவாக கிடைக்கும், எந்தப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று பார்ப்போம்.
இந்த பட்ஜெட்டில் வரி விதிப்பு மற்றும் சலுகைகளின் எதிரொலியாக விலை குறையும் பொருட்கள்:
17 புற்றுநோய் மருந்துகள்
மின்சார வாகன பேட்டரிகள்
விளையாட்டு உபகரணங்கள்
சோலார் பேனல்கள்
ஸ்மார்ட் போன்கள்
தோல் உபகரணங்கள்
மைக்ரோவேவ் ஓவன்கள்
லித்தியம் பேட்டரி பாகங்கள்
சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள்
7 உயிர்காக்கும் மருந்துகள்
நீரிழிவு தொடர்பான மருந்துகள்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்
வெளிநாட்டு கல்வி
மதுபான கழிவுகள்
காலணி பாகங்கள் ஏற்றுமதி
மைக்ரோவேவ் ஓவன்
தோல் ஏற்றுமதி
பட்ஜெட் 2026: எவற்றின் விலை அதிகமாகும்?
சிகரெட்
பீடி
பான் மசாலா
குட்கா
இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள்
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேநேரத்தில், 2025 வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போது, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது







No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.