7 மணி நேர முடக்கத்திற்கு பின் வாட்ஸ்அப், பேஸ்புக் சேவை துவங்கியது
உலக நாடுகளில் சமூக வலைதளங்களின் சேவை இன்று (அக்.04) திடீரென முடங்கியது.. 7 மணி நேர முடக்கத்திற்கு பின் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை துவங்கியது.
சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக வலைதளங்கள் வாயிலாக புகைப்படம், வீடியோ, செய்திகள் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இவற்றின் சேவைகள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கியது.
7 மணி நேரம் முடக்கம்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக கூறப்படுகிறது. சேவைகள் முடங்கியதால், பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சேவைகள் முடங்கியதால், பயனாளிகளால் புதிய தகவல்களை 7 மணி நேரமாக அனுப்ப முடியவில்லை.
இதே போன்று கடந்த ஜூன் மாதம் உலகமெங்கும் உள்ள சமூக ஊடகங்கள், அரசு மற்றும் செய்தி வலைதளங்கள் முடங்கின. இங்கிலாந்து அரசின் இணையதளம், பிபிசி, சிஎன்என், திகார்டியன், நியூ யார்க் டைம்ஸ் உட்பட பல சர்வதேச ஊடக வலைதளங்களும், ஒரே நேரத்தில் முடங்கின. இதற்கு காரணம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட, 'கிளவுட் கம்ப்யூட்டிங்' சேவையைத் தரும் 'அமேசான் வெப் சர்வீஸ்' செயலிழந்தது தான் என கூறப்படுகிறது.
இயல்பான சேவை வழங்க நடவடிக்கை
பயனாளிகளுக்கு இயல்பான சேவை வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்தது.
மக்களுக்கு சேவைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேஸ்புக் நிறுவனமும் தெரிவித்தது.
இயல்பு நிலைக்கு திரும்பியது ‛வாட்ஸ் அப்'
இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணியளவில் வாட்ஸ் அப் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. 7 மணி நேரம் கழித்து வாட்ஸ் அப் சேவை இயல்பு நிலைக்கு வந்ததையடுத்து பயனாளிகள் நிம்மதியடைந்தனர். வாட்ஸ் அப் ஐ தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவையும் இயல்பு நிலைக்கு வந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக ‛வாட்ஸ் அப்', ‛பேஸ் புக்‛ மற்றும் ‛இன்ஸ்டா கிராம்' நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மன்னிப்பு கோரிய ‛பேஸ்புக்‛, ‛வாட்ஸ்அப்' மற்றும் ‛இன்ஸ்டாகிராம்'
சேவை முடங்கியதால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பயனாளிகள் அவதியடைந்தனர். இதனால் பயனாளிகளிடம் மன்னிப்பு கோருவதாக வாட்ஸ்அப் நிறுவனம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் கேட்டுக் கொண்டன. '
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.