இந்தாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அக்.,04 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்.,07) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2021ம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசானது எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தான்சானியா நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். 21 வயதில் இருந்து பல நாவல்களை எழுதியுள்ள அப்துல் ரசாக்கிற்கு வளைகுடா நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் வாழ்வியல் பற்றிய நாவலுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.