நண்பர்களே வணக்கம் 🙏🏻
*🔥🅱️ ஊக்க ஊதிய உயர்வு சார்ந்து வழக்குகள் தொடர்ந்து "Stay of Recovery Alone" என குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஊதியத்தை திருத்தியமைக்க பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு*
Click here proceedings
பள்ளி கல்வி ஆணையரக *நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் 16/08/22* நாளிட்ட செயல்முறைகள் எல்லா WhatsApp குழுக்களில் வந்தது.
அது சார்ந்து பல நண்பர்களின் சந்தேகங்கள்...
எனது புரிதல்..
1) பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.phil உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு அரசாணை எண் 18 ப.க.து 18/01/2013 இல் வந்தது...
( எந்த தேதி முதல் அனுமதி என குறிப்பிடவில்லை)
அதனால் பலர் பணியில் சேர்ந்த நாள் முதல்... அல்லது
M.Phil முடித்த நாள் முதல் என ஊக்க ஊதிய உயர்வு பெற்றனர்...
பின்னர் 17/07/2013 இல் வந்த தெளிவுரையில் அரசாணை வெளியீடு நாள் 18/01/2013 முதல் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு எனப்பட்டது ..
18/01/2013 க்கு முன் ஊக்க ஊதிய உயர்வு பெற்றவர்களுக்கு தணிக்கை தடை ..
திரும்ப கட்டச் சொல்லி உத்தரவு..
பலர் *தணிக்கை தடை எதிராக நீதிமன்றத்தில் தடை ஆணை( Stay )* பெற்றனர்....
2) இதே போல... சில தனியார் பல்கலைக்கழகங்கள்..
மற்றும் அனுமதி இன்றி படித்தது....
உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு பெற்று..
அதற்கு தணிக்கை தடை ஏற்பட்டு...
அதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர்...
இப்போது நிதி கட்டுப்பாடு அலுவலர் கடிதத்தில் நான் புரிந்து கொள்வது...
தணிக்கை தடைக்கு இப்படி பெற்ற *நீதிமன்ற தடை ஆணையை கூர்ந்து கவனிக்க* வேண்டும்...
அதில் "stay of recovery alone"..
அதாவது கூடுதலாகப் பெற்ற "தொகையை திரும்ப செலுத்த மட்டும் தடை ஆணை" எனில் ...
ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்து வரும் மாதங்களில்
" *ஊதியத்தை மாற்றி அமைக்க* " கூறியுள்ளார்...
எனவே இந்த செயல்முறை *ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த* அனைவருக்கும் கிடையாது..
ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு பெற்று..
தணிக்கை தடை ஏற்பட்டு...
*நீதிமன்றத்தில் தடை ஆணை* ( அதிலும் குறிப்பாக... தொகையை திரும்ப செலுத்த மட்டும் தடை ஆணை *stay of recovery alone* ) பெற்றவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்...
10/03/2020 இக்கு முன் உயர் கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு *நிதித் துறை ஒப்புதலுக்காக காத்திருக்கும்* ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம்....
தகவலுக்காக.
*க.செல்வக்குமார்,*
தலைமையாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
ஆனந்தூர். இராமநாதபுரம் - மாவட்டம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.