*கவனம் தேவை*
*ஆசிரியர்களே!*
அனேக ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பணத்தைத் திரும்பப் பெற்று வருகிறார்கள் என்பது எல்லா ஒன்றியங்களிலும் நடக்கிறது என்பது கண்கூடு
எனக்குத் தெரிந்து சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சில ஆடிட்டர்கள் திருப்பித் தரும் தொகையில் 10% எனக்கு என பேரம் பேசி இது போன்ற தவறான செயல்களில் நமது ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறார்கள் அதற்கும் நம்மவர்கள் பலர் காசுக்காக ஆசைப்பட்டு இது போன்ற செயல்களில் மாட்டிக் கொள்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் நாம் வருமான வரி செலுத்துவதில் எந்த தவறும் செய்யக்கூடாது என அனைவரையும் அறிவுறுத்தி வருகிறேன் காரணம் வருமான வரித்துறை விதிகளின்படி நாம் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யும் ரிட்டன் ஆனது ஏழு ஆண்டு காலம் வேலிடிட்டி உடையது .
அதாவது ஏழு ஆண்டுகளுக்குள் கணினி ரேண்டம் செக்கப் மூலம் நம்முடைய PAN எண்ணை தேர்வு செய்ய நேரிட்டால் ,
நாம் தேர்வு செய்த அந்த ஆண்டுக்குரிய வரவு செலவு கணக்கினை அதாவது வருமான வரி தாக்கல் செய்த அனைத்து கணக்குகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தாக்கல் செய்து நாம் செய்தது சரி என நிரூபிக்க வேண்டும்..
ரேண்டமில் வரும் வெரிஃபிகேஷன் பொழுது தவறு என கண்டறியப்பட்டால் 300% அபராதம் மற்றும் வரித்தகையும் செலுத்த வேண்டும் .
மேலும் இது போன்ற கிரிமினல் நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள்
எனவே ஒரு முறை வருமான வரி தாக்கல் செய்யும் கணக்கானது ஏழு ஆண்டுகளுக்கு நாம் அதனை பாதுகாத்து வைக்க வேண்டியது அவசியம் .
இந்த விழிப்புணர்வை அனைத்து ஆசிரியர்களுக்கும் சொல்லுங்கள் எனவே நாம் எந்தவித தகிடு தத்தங்களும் செய்யாமல் வருமான வரி கணக்கை மட்டும் சரியாக காண்பித்து சரியான வரியை நாம் செலுத்தி விட வேண்டும் என்பதில் முழு கவனம் கொள்ளுங்கள் .
ஒரு ஆண்டுக்கு திரும்பப் பெரும் தொகை அதிகபட்சம் 20 லிருந்து 25 ஆயிரம் மட்டுமே அதற்காக ஆசைப்பட்டு கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டால் பல மாத ஊதியத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.