*Potential Dropout*
(இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள்)
*அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,*
3+ நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் தற்போதைய நிலையை அறிந்து தங்கள் பள்ளிக்கான EMIS தளத்தில் Student ----> Potential Dropout என்னும் பகுதியில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
*நிலை 1*
*அம்மாணவர் வேறு பள்ளிக்குச் சென்றிருந்தால்* Not Applicable என்பதை தேர்வு செய்து Update செய்யும் தேதியை தேர்வு செய்து ✓ என்பதை கிளிக் செய்யவும்.
அதே போல், அம்மாணவர் EMIS ID ஐ Common Pool க்கு அனுப்பி விடவும். ஏற்கனவே Common Pool க்கு அனுப்பி இருந்தால், வேறு பள்ளியால் EMIS ID எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்யவும். இதில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால், தங்கள் பள்ளி ஆசிரியர் பயிற்றுநரை தொடர்பு கொள்ளவும்.
*நிலை 2*
அம்மாணவர் வேறு பள்ளிக்குச் செல்லவில்லை எனில் அதில் குறிப்பிட்டுள்ள தகுந்த காரணங்களை தேர்வு செய்து, மாணவரை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வர முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீண்டும் பள்ளிக்கு வர மாணவர் தயாராக உள்ள தேதியை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் காட்டப்படும் மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தினையும், அடுத்து அந்த மாணவர் பள்ளிக்கு வரும் தேதியையும் பதிவு செய்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியருக்கு தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அது மட்டுமின்றி, இந்தப் பணியினை ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மாணவர்களின் பெயர்கள் காட்டப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் வேண்டும்
Potential Dropout பணியினை முடிப்பது அந்தந்த வகுப்பாசிரியரின் கடமை என்பதை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இது சார்ந்து, ஆசிரியர்களுக்கான கூட்டப் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட பணியினை தலைமை ஆசிரியர்கள் ஜூலை மூன்றாம் தேதி முதல் தொடர்ந்து கண்காணித்து பதிவு செய்யவும் அதனை தொடர்ந்து ஆசிரியர் பயிற்றுநர்கள் மாணவன் ஆறு நாட்களுக்கு மேல் வராமல் இருந்தால் கண்காணித்து பதிவு செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Click here to download PDF
இந்த potential dropout மாணவர்களை தொடக்கம் முதலே கண்காணித்து பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சி மேற்கொண்டால் மாணவர்களின் இடைநிற்றலை முற்றிலுமாக தடுக்க இயலும் . எனவே இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நிலை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இதற்கான மீளாய்வுக் கூட்டம் நடைபெறுவதால் கூடுதல் கவனம் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.