1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

தமிழ் புதல்வன்" திட்ட துவக்க விழா நிகழ்ச்சியை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வாயிலாக காண வேண்டும் Google Form-இல் 09.08.2024 அன்று நண்பகலில் தவறாது உள்ளீடு செய்ய வேண்டும்

 

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட "தமிழ் புதல்வன்" எனும் மாபெரும் திட்டம் இந்த நிதியாண்டு முதல் அமல்படுத்திடும் வகையில் 09.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 09.08.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெறும் "தமிழ்புதல்வன்" திட்ட துவக்க விழா நிகழ்ச்சியை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வாயிலாக காணும் வகையில் பள்ளிகளில் தக்க ஏற்பாடுகளை செய்யும் படி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. துவக்க விழா நிகழ்ச்சிகளை காணொலியில் காண்பதற்கான லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

காணொலிக்கான Link:

 Google Form-க்கான Link:

மேலும், துவக்க விழா நிகழ்ச்சியை கண்டு களித்த அறிக்கையை அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களின் பள்ளியில் இந்நிகழ்ச்சியை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கையினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Form-இல் 09.08.2024 அன்று நண்பகலில் தவறாது உள்ளீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags