புதிய பட்டதாரி ஆசிரியர்கள் /இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் எப்போது?
கடந்த ஓராண்டாக புதிய நியமனம் செய்வதற்கான ஆசிரியர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று முடிந்துள்ளது
தற்போது ஆசிரியர்கள் நியமனம் எப்போது? என்ற கேள்வி அனைத்து ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வி நாட்குறிப்பில் புதிய நியமனத்திற்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்த அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.
அதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை மாதமும்,இடைநிலை ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதமும் என தகவல் உள்ளது.எனவே இம்மாத கடைசியில் அல்லது அடுத்த மாதத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆணை செப்டம்பர் மாத முதல் வாரத்தில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.