பல கட்ட பாதுகாப்பு முறைகளை பின்பற்றி துவக்க பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில், '' கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகளை திறத்தல்; ஒரு நிலையான குழப்பம்'' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் உள்ளதாவது: யுனெஸ்கோ அறிக்கையின்படி, கடந்த 500 நாட்களுக்கும் மேலாக உலக அளவில் 32 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. சில வார்த்தைகளை கூட கற்க முடியாமல் இருக்கும் விளிம்பு நிலை சமூகத்தில் இருக்கும் குழந்தைகள், மலைப்பகுதிகளில், தகவல் தொடர்பு இல்லாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பள்ளிகள் திறக்காமல் இருப்பது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதால், சமூகத்தின் தொடர்பை இழந்துள்ளார்கள். உடல்ரீதியான செயல்பாடுகள், நண்பர்களுக்கு இடையே பிணைப்பு இல்லாமல் தவிக்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. பள்ளிகளில் பல கட்ட பரிசோதனை, பாதுகாப்பு உத்திகள் மூலம் கோவிட் பரவலை தடுக்க முடியும். இந்திய சூழலுக்கு ஏற்ப கோவிட் காலத்திற்கு முன்பு இருந்ததை போன்று பள்ளிக்கல்வி முறையை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகளை திறக்கும் முடிவை அறிவிப்பதற்கு முன்பாக கோவிட் அலைகள் இதற்கு முன்பு உருவாகியபோது, மாவட்ட ரீதியாக, மாநில ரீதியாக இருக்கும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்தும், வயதுவந்த பிரிவினர் எத்தனை சதவீதம் தடுப்பூசி செலுத்தி உள்ளார்கள் எனவும் கண்டறிய வேண்டும். அதன்பின் பள்ளிகள் திறப்பை அறிவிக்கலாம்.
ஏற்கனவே இருக்கும் வழிமுறைகளை பயன்படுத்தி பள்ளிக்கூடங்களில் பரிசோதனை செய்யலாம். உள்ளூரில் கோவிட் பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறப்பு, வகுப்புகளை நடத்துவது குறித்து முடிவு எடுக்கலாம். பள்ளிகள் திறக்கப்படும்போது, ஆசிரியர்கள், ஊழியர்கள், குழந்தைகளை வாகனங்களில் அழைத்து செல்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருப்பதையும், முகக்கவசம் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகள் திறப்பு மூலம் அதிகமான பலன்களை பெற வேண்டும் என்றால், கற்கும் குழந்தைகளுக்கு கோவிட் பரவல் ஏற்படாமல் இருக்க பல அடுக்கு பாதுகாப்பு சூழலை உருவாக்கலம். முறையான முகக்கவசம் அணிதல், சானிடைசர் அடிக்கடி பயன்படுத்துதல், கைகளை அடிக்கடி குழுவுதல் ஆகியவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் அடிக்கடி செய்ய வேண்டும்.
5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் பரிந்துரை செய்யப்படவில்லை. 6 முதல் 11 வயதுள்ள குழந்தைகள் அவர்களின் திறனை பொறுத்து பாதுகாப்பாக முகக்கவசம் அணியலாம்.
பள்ளிகளில் வகுப்பறைகள் காற்றோட்டமாக இருக்க வேண்டும். ஏசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் உணவுகளை பகிர்ந்து கொள்ளக்கூடாது. கேண்டீன், உணவு உண்ணும் அறைகளில் நீண்ட நேரம் செலவிடுவதை தவிர்க்க அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.