Family Link App....
நாம் ஓடி ஓடி சம்பாதிப்பது நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கே...
அவர்களின் சிறந்த கல்வி, வாழ்க்கை முறை மற்றும் ஒளிமயமான எதிர்காலமே நம் குறிக்கோள்...
இந்த கொரானா காலத்தில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் முதலிடம் வகிப்பதும் கல்வியே...
2021 இல் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்ற பன்னாட்டு தனியார் நிறுவனத்தின் அறிவிப்பே இதற்கு சான்று.
நாட்டின் பெருவாரியான குழந்தைகள் வீட்டிலிருந்தபடியே இணைய வழி கல்வி பயில்கின்றனர். இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பெரும்பாலும் இருவருமே பணிக்கு செல்கின்றனர்.
இவர்கள் தமது குழந்தைகளுக்கு ஒரு Laptop அல்லது Smart Phone கொடுத்துவிட்டால் போதும் என்று எண்ணி பணிக்கு செல்கின்றனர். பெரும்பாலும் வயதான பெரியவர்களே குழந்தைகளை கவனித்துக்கொள்கின்றனர்.
இணைய வழி வகுப்புக்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் தமது குழந்தைகள் Laptop அல்லது Smart Phone இல் என்ன பார்க்கிறார்கள் அல்லது என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர் மற்றும் வீட்டிலுள்ள பெரியவர்கள் கவனிப்பத்தில்லை. வயதான பெரியவர்களுக்கும் தொழில்நுட்ப அறிவு இல்லை...
இணையம் இரண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம் போன்றது.
நல்லவற்றிற்கு பயன்படுவது போல நம் குழந்தைகள் கெட்டுப்போகவும் உதவும்...
Family Link App என்ற Android செயலியை உங்களது Smart Phone இல் Install செய்து விட்டால் அவர்கள் எதை பார்க்கலாம், எவ்வளவு நேரம் பார்க்கலாம் எதை பார்க்கக்கூடாது என்பதை பெற்றோர் முடிவு செய்யலாம்.
இந்த Family Link App ஐ உங்கள் Smart phone மற்றும் உங்கள் குழந்தையின் Smart phone அல்லது கணினி அல்லது மடிக்கணினியில் install செய்யவேண்டும்.
நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் smart phone லிருந்து அவர்களின் இணைய செயல்பாடுகளை நீங்கள் கண்காணிக்க முடியும்.
ஒரு Game டவுண்லோட் செய்யவும் உங்கள் குழந்தை உங்கள் அனுமதி இல்லாமல் செய்ய இயலாது. உங்கள் குழந்தை எங்கே இருக்கிறான். Smart Phone இல் என்ன பார்க்கிறான் என்று அனைத்தையும் நீங்கள் அறியலாம்.
Family Link செயலி, மடிக்கணினி மற்றும் கணினியிலும் பயன்படும் வகையில் தனியாக இணையத்தில் உள்ளது.
Here is the link for AndroidPhone Click here
Here is the link for Computer or Laptop...
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.