இனி தமிழில் 45 மதிப்பெண் பெற்றால் மட்டுமே அரசு வேலை.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழகத்தில் அரசுத் துறை, மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டிற்கு 30க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வில் புதிய மாற்றங்களை தற்போது கொண்டுவந்துள்ளது.
அதன்படி, முக்கிய அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான புதிய மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், தமிழ் பாடத்தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்படும்.
இனி நடைபெறவுள்ள அனைத்துத் தேர்வுகளுக்கு முன்பாகவும் தமிழ் மொழித்தாள் தேர்வு நடத்தப்படும்.
நடைமுறையில் இருந்து வரும் One Time Registration ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
பதிவு விண்ணப்பத்தில் புகைப்படம், கையொப்பம் போன்றவை தெளிவாக இல்லை என்றால் அவை நிராகரிக்கப்படும்.
மேலும், பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.