வேதியியல் துறையில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அக்.,04 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்.,06) வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2021ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசானது ஜெர்மனியைச் சேர்ந்த பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகிய இருவருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பு ஆராய்ச்சிக்காக இருவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.