'வாகனங்களில் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே இருக்குமாறு விரைவில் சட்டம் கொண்டுவரப்படும்' என, மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹாரன்களில் இனிமேல் இந்திய இசைக் கருவிகளின் இசை மட்டுமே இருக்குமாறு விரைவில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருகிறோம்.
குறிப்பாக, இந்திய இசைக் கருவிகளான புல்லாங்குழல், வயலின், மவுத்ஆர்கன், ஹார்மோனியம் ஆகியவற்றின் இசை மூலம் ஹாரன் ஒலி அமைக்குமாறு ஆய்வு செய்து வருகிறோம்.
ஆல் இந்தியா ரேடியோவில் உள்ள இசை போல், போலீஸ், ஆம்புலன்களில் பயன்படுத்தப்படும் சைரன் ஒலி, காதுகளுக்கு இனிமையாக இருக்குமாறு மாற்ற திட்டமிட்டு உள்ளோம்.தற்போதுள்ள சைரன் ஒலியும், அமைச்சர்கள் அதிகாரிகள் செல்லும்போது ஒலிக்கவிடும் சைரன் ஒலியும் வெறுப்பாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.