இது நம்மை புதுப்பித்துக்கொள்ளப் போகும் நேரமாகும்.
கொரானா (Covid-19)எனும் பெருந்தொற்றின் பேரலையில் மூழ்கிய பலவற்றில் குழந்தைகளின் கல்வியே மிக முக்கியமான முதலிடத்தைப் பெறுகிறது. ஒரு தலைமுறையின் அடித்தளம் தாறுமாறாய்க் கிடக்கிறது.
நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்போகிறது. இது வழக்கமான பள்ளித் திறப்புமல்ல, வருகை புரிபவர்களும் நம்மிடம் இருந்து சென்ற மாணவர்களின் வழக்கமான மனதுமல்ல.
விடுமுறைக்கு ஏங்கித் தவித்த குழந்தைகள் இன்று நீண்ட வருடக்கணக்கான விடுமுறைக்குப் பின்பும் பள்ளிக்கு வர பெரியதாக விருப்பம் காட்டாமல் உள்ளனர். அலைபேசியில் அத்தனை நேரத்தையும் செலவிட்டுக் கொண்டு கல்வியில்லா உலகில் உள்ளனர்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
பள்ளி திறந்தபின் நமது மிக முக்கியமான பணி எதுவாக இருக்கும்?
நாம் குழந்தைகளை மிகக் கவனமாகக் கையாளக்கூடிய சூழலும், பொறுப்பும் ஏற்பட்டுள்ளது
1. இப்போது கற்பிப்பதை விட பள்ளிக்கு குழந்தைகளை விருப்பமுடன் வரச்செய்வதே முதல் பணி
2. 600 நாள்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் குழந்தைகளிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்
3. விருப்பமான இடமாகப் பள்ளியை மாற்ற எப்படியாவது முயலுங்கள், புதுமையைப் புகுத்துங்கள், பழைய நிலையை மாற்றுங்கள்.
4. குழந்தைகளுக்காக ஆசிரியர் எனும் அங்கியை கழற்றிவிட்டு ஆடுங்கள், பாடுங்கள், அவர்களோடு விளையாடுங்கள்.
5. பாட புத்தகத்திற்குள் அவசரப்பட்டு பயணப்படாதீர்கள், பொறுமையாக அவர்களோடு பயணப்படுங்கள்
6. வாசிக்க வையுங்கள், எழுத வையுங்கள் அது கதைகளாக, பாடல்களாக இருக்கட்டும். ஓவியங்களை வரையச் சொல்லுங்கள், கதைகளை கூறச் சொல்லுங்கள்.
7. அலைபேசியை மறக்குமளவு மகிழ்ச்சியை போதியுங்கள், பள்ளி திறந்த பின் அலைபேசியில் எதுவும் பரிமாறாதீர்கள்.
8. பள்ளிக்கு வருகை புரிந்தவர்கள் எக்காரணம் கொண்டும் எதற்கு வந்தோம் என எந்தச் சூழலிலும் அவர்கள் நினைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ஏதாவது சில தவறுகள் செய்தாலும் அதைப் பெரிதுபடுத்தி, பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தி தண்டனைகள் கொடுத்துவிட வேண்டாம்.
9. பள்ளிக்கு வருபவர்கள் ஒப்படைப்புகள் ஏதாவது செய்யாமல் இருந்தாலும் சரி அல்லது வேறு எதற்காகவும் கோபப்படாதீர்கள், உங்கள் முகங்களில் புன்னகை பூத்துக்கொண்டு இருக்கட்டும்.
10. கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரையாடுங்கள், அலைபேசியை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்குங்கள். அதுகுறித்த குறும்படங்களைக் காட்டுங்கள். வகுப்பறையை விளையாட்டு மைதானமாக்குங்கள்
பேரன்பைப் பொழிங்கள்
*பெருமகிழ்வைக் கொடுங்கள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.