*தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு:* மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் இனை இயக்குநர் அவர்கள் நேற்று Google meet வாயிலாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தங்களுக்கு தகவலாக தெரிவிக்கப்படுகிறது
👇👇👇👇👇👇👇👇
1) தமிழ் , ஆங்கில பாடங்களில் தினமும் hai hi பக்கம் கையெழுத்து பயிற்சி அளித்து தேதியுடன் திருத்தப்பட வேண்டும் .
2)ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் ,ஆங்கில பாடங்களில் மாதம்தோறும் இரண்டு கட்டுரைகள் சொந்தமாக எழுதும் பயிற்சி அளித்து திருத்தப்பட வேண்டும்.
3)அனைத்து வகுப்புகளுக்கும் 1 முதல் 16 வரை (16×16) வரை வாய்ப்பாடு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் .
4)1,2,3 வகுப்புகளுக்கு தமிழ் அபிநயப்பாடல் மற்றும் ஆங்கிலம் action song 10 வீதம் பயிற்சியளித்திருக்கவேண்டும்.
5)ஒவ்வொரு நாளும் அனைத்து பாடங்களுக்கும் குறிப்பேடுகளில் மாணவர்கள் எழுதச் செய்து தேதி உடன் திருத்தம் செய்ய பட்டிருக்க வேண்டும்.
6) அனைத்து பாடப் புத்தகங்களிலும் பாடம் நடத்தி முடிக்கப்பட்ட உடன் பின்பகுதியில் உள்ள பயிற்சிகளை பாடப்புத்தகத்தில் மாணவர்கள் எழுதச் செய்து திருத்தம் செய்து தேதியுடன் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரின் கையொப்பம் இருக்க வேண்டும்.
7) தினமும் 10 தமிழ் வார்த்தைகள்.
10 ஆங்கில வார்த்தைகள் டிக்டேஷன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
8)தினமும் கூட்டல், கழித்தல் ,பெருக்கல், வகுத்தல் ஒவ்வொன்றிலும் ஐந்து கணக்குகள் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
9)கரும்பலகைகள் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.
10)தாழ்நிலைக் கரும்பலகைகள் மாணவர்களால் முழுமையாக எழுதி நிரப்பப்பட்டு இருக்க வேண்டும்.
11.தலைமையாசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் அவரவர் பாட சம்பந்தமான வாரவாரி பாடக் குறிப்பேடுகள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
12.பாடம் நடத்தும் போது அதற்குறிய கற்பித்தல் உபகரணங்கள் (TLM)
பயன்படுத்தப்பட வேண்டும்.
13.ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது அதனை தலைமை ஆசிரியர்கள் பார்த்த Observation பதிவேடு இருக்க வேண்டும்.
14.மதியம் சத்துணவு போடும் போது அதனை தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வை செய்ய வேண்டும்.
14.அழுகிய முட்டைகள் இருந்தால் அதனை தவிர்த்து நல்ல முட்டைகள் வழங்க சத்துணவு அமைப்பாளர்க்கு தெரிவிக்க வேண்டும்.தொடர்ந்து வந்தால் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்
15.இடிக்கப்பட வேண்டி கட்டிடங்கள்/சீரமைப்பு செய்ய வேண்டிய கட்டிடங்கள் இருப்பின் அதன் விவரமும், கட்டிடங்கள் இடித்தும்
பழுது பார்த்தல் செய்திருந்தால் அதன் விவரமும் அறிக்கையாக 2 பிரதிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.
16.மருத்துவ குழு பள்ளியில் மாணவ/மாணவியருக்கு உடல் பரிசோதனை செய்யும் போது ஆசிரியர்கள் உடன் இருந்து கண்காணிக்கவும்.
17.பள்ளி வெளிப்புறம் மற்றும் வகுப்பறை உட்புறம் தூய்மை.....
18.school profile முழுமையாக பூர்த்தி செய்து மேஜையில் இருக்க வேண்டும் ...19. பள்ளி மானியம் PFMS மூலம் முறையாக செலவு செயயப்பட்டு இருக்க வேண்டும்... 20. தலைமையாசிரியர்கள் விடுப்பில் செல்லும் போது, உதவிஆசிரியர்கள் பதிவேடுகளின் விபரம் கூறவேண்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.