தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதற்கான தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி 2,207 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. கொரோனா வைரஸ் உள்ள சூழலில் தேர்வினை கணினி வழியில் நடத்தினர். இதில் தமிழ், வணிகவியல், மனையியல், இந்திய கலாச்சாரம், இயற்பியல் உள்ளிட்ட தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறவில்லை.
ஏனெனில் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி அன்று நடைபெற்றது. அதனால் வாக்குப்பதிவு காரணமாக சனிக்கிழமை நடைபெற இருந்த தேர்வுகள் நேற்று நடைபெற்றது. அதன்படி அனைத்து தேர்வுகளும் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் இத்தேர்வினை 2.5 லட்சம் பேர் எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்த தேர்வுகள் அனைத்தும் கடந்த 2019ம் ஆண்டை விட எளிதாக இருந்ததாக தேர்வர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான கீ ஆன்ஸர் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கீ ஆன்ஸர் வெளியான பிறகு இந்த தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். இதையடுத்து இறுதியாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க உள்ள நபர்களின் பட்டியல் வெளியிடப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற மார்ச் மாதத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.