வரவு வைக்கப் பட்ட தொகையில் ஐந்தில் ஒரு பங்குக்கு மிகாமல் அவசர செலவினங்களுக்கு பணமாக எடுத்து செலவு செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது.
ரூ 12500 வரவு வைக்கப் பட்டிருந்தால் ரூ 2500 ம்,
ரூ 5000 வரவு வைக்கப் பட்டிருந்தால் ரூ 1000 ம்
பணமாக எடுத்து செலவு செய்யலாம்.
ஒரு காசோலையில் இந்த தொகை எடுக்கும் போது ரூ 1000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என கூறப் படுகிறது.
ஆனால் இந்த செலவினத்தை PFMS இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
Vendors க்கு பதில் Self என தேர்வு செய்து, காசோலை எண், தேதி, தொகை, செலவின விவரம், cheque favour of போன்ற தகவல்களை DO Login மூலம் பதிவு செய்து, DA Login மூலம் approval தர வேண்டும்.
Self என்பதால் print payment advice option வராது. ஆனால் செலவுத் தொகை PFMS ல் கழித்து காண்பிக்கும்.
வங்கியில் காசோலை மூலம் பணம் எடுத்து செலவு செய்து அதை EMIS ல் expenditure ல் bill உடன் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்.
மார்ச் 31 க்குள் செலவு செய்யப்பட்டு EMIS ல் செலவு விவரம் பதிவு செய்ய வேண்டும்.
26, 27 வங்கி விடுமுறை
28, 29 Bank staff strike என கூறப் படுகிறது.
மார்ச் 30 & 31 இந்த நிதி ஆண்டின் கடைசி வேலை நாட்கள்.
PFMS மூலம் பண பரிவர்த்தனை செய்யும் போது, கடைக்காரரின் வங்கிக் கணக்கில் வரவு வர ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம் என்பதால் மார்ச் 25க்குள் PFMS மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.