1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சென்னை மண்டல அளவிலான பள்ளிக் கல்வித்துறை ஆணையர், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கீழ்வரும் செயல்பாடுகளை பள்ளி அளவில் செயல்படுத்திட வலியுறுத்தப்பட்டது.

 

அனைத்து தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

சென்னை மண்டல அளவிலான பள்ளிக் கல்வித்துறை ஆணையர், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கீழ்வரும் செயல்பாடுகளை பள்ளி அளவில் செயல்படுத்திட வலியுறுத்தப்பட்டது.



1 ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் பாடப்பொருளுக்குரிய கற்றல் அடைவுகள் (LEARNING OUT COMES) கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

2 NOTES 0F LESSON ஐ அச்சடிக்கப்பட்ட படிவத்தில் எழுதாமல் ஆசிரியர்கள் தாங்களே தலைப்புகளை எழுதி எழுத வேண்டும்.

3. ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

4. கட்டுரை ஏடுகள் சரியான முறை முறையில் திருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள் பிழைகளை சிவப்பு மை பேனாவால் திருத்தம் செய்திருக்க வேண்டும்.பிழையான கருத்துகள் இடது பக்கம் ஐந்து தடவை எழுதப்பட்டிருக்க வேண்டும்.

5. பள்ளி மேலாண்மை குழுவின் உதவிகளை தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

6. மாணவர் வருகை குறைவு, மாணவர்கள் தாமதமாக வருதல், மாணவர்கள் ஒழுக்க குறைவு போன்ற குறைபாடுகளை களைய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டிருக்க வேண்டும்.

7. ஆசிரியர்கள் கற்பித்தலின் போது மாணவர்கள் தங்கள் ஐயங்களை கேள்விகளாக கேட்க வலியுறுத்த வேண்டும்.

8. வகுப்பறைகளில் முதல் இரண்டு வரிசைகளில் மெல்ல கற்கும் மாணவர்கள், சிறப்பு குழந்தைகளை அமர செய்திருக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9, மெல்ல கற்கும் மாணவர்கள், எழுத்து பயிற்சி, வாசிப்பு பயிற்சி இல்லாத மாணவர்களை பிரித்து கீழ்வரும் செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும்.

A. BRIDGE COURSE

 B.PEER LEARNING

C. FULL TIME SEPARATE SECTION    etc

10,   நூலக புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் தந்திருக்க வேண்டும். நூலக பாட வேளைகளில் வகுப்புக்கு ஏற்ற செயல்பாடுகளை மாணவர்களுக்கு அளித்து அவர்களின் நூலக அறிவை வளர்க்க வேண்டும். (கதை கூறுதல், விவாதித்தல், தனிநபர் நடிப்பு, பார்த்து பாவனையுடன் வாசித்தல்)

11. அறிவியல் ஆய்வகத்திற்கு வாரம் ஒரு முறை மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் அறிவியல் ஆய்வக பொருட்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

12.  ஒரு பள்ளியில் தலைமையாசிரியர் அனைத்து விதத்திலும் முன்னோடியாய் இருக்க வேண்டும். பள்ளியை பற்றிய அனைத்து விபரங்களையும் தலைமையாசிரியர் அறிந்து வைத்திருக்க வேண்டும். உயர் அதிகாரிகளுக்கு பள்ளியைப் பற்றி கூற அனைத்து விதத்திலும் தயாராய் இருக்க வேண்டும்.

13,  EMIS இணைய தளத்தில் உள்ள மாணவர் எண்ணிக்கையும் மாணவர் வருகை பதிவேட்டில் உள்ள மாணவர் எண்ணிக்கையும் சரியாக இருக்க தலைமையாசிரியர்கள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags