நேற்று மாலை பல்லவன் அதிவிரைவு வண்டியில் தாம்பரத்தில் இருந்து திருச்சி பயணம் மேற்க்கொண்டேன்..
எனக்கு புக் ஆகியிருந்த window seat இல் ஜன்னல் திறக்க முடியாத வகையில் ஜாம் ஆகியிருந்தது எவ்வளவோ முயற்ச்சித்தும் திறக்க முடியவில்லை வண்டி திண்டிவனம் நெருங்கையில் railmadad என்ற வெப்சைட் மூலமாக புகார் அளித்தேன் அடுத்த 2 நிமிடங்களில் எனது நம்பர்க்கு அழைப்பு வந்தது சீட் நம்பர் பிரச்சினைகளை கன்பார்ம் செய்து கொண்டு விழுப்புரம் ரயில் நிலையத்தில் சரி செய்து கொடுப்பதாக உறுதி அளித்தனர்..
சரியாக 6.10 மணிக்கு ரயில் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தது ரெடியாக இருந்த ஊழியர்கள் உடனடியாக சரி செய்து ஜன்னலை திறந்து கொடுத்து சென்றார்கள்.. அவர்கள் சென்ற அடுத்த 3 நிமிடங்களில் மறுபடியும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது உங்கள் புகார் சரிசெய்யபட்ததா என்று கேட்டுவிட்டு கோச் Maintenance செல்லும்போது அதை நிரந்தரமாக சரி செய்வதாக உறுதியளித்தனர்...
இந்த இணையத்தில் நம் பயணத்தின் போது ஏற்படும் பல பிரச்சினைகளை புகார் அளிக்க வழி உள்ளது.. நண்பர்கள் இந்த சேவையை பயண்படுத்திகொள்ளுங்கள் Click here
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.