1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

சூரிய கிரகண எப்போது? கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை*

  சூரிய கிரகணமானது இந்த முறை முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு அடுத்த நாள் (அக்டோபர் 25, 2022) நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

லட்சுமி பூஜை :

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத அமாவாசையன்று, தீபாவளி பண்டிகையன்று அன்னை மகாலட்சுமிக்கு பூஜை செய்வது விசேஷமானது.

இந்த ஆண்டு லட்சுமி பூஜைக்கு அடுத்த நாள் சூரிய கிரகணம் ஏற்படுவதால், நள்ளிரவுக்குப் பிறகு சூதகம் தொடங்கும். சூரிய கிரகணத்தால் லட்சுமி பூஜையில் எந்த வித பாதிப்பும் இருக்காது.




சூரிய கிரகணம் என்பது என்ன?


பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் கடந்து செல்வதை தான் சூரிய கிரகணம் என்கிறோம். 

வரும் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற உள்ள சூரிய கிரகணமானது, பகுதி சூரிய கிரகணமாக (pயசவயைட ளழடயச நஉடipளந) தோன்றும் என்ற நிலையில், பூமியில் இருந்து தெரியும் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு மறைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கிரகணத்தின்போது சூரியனின் 65 சதவீத பகுதியை நிலவு மறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக இருக்கும் என்பதால் ஒரு இடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிகிறது.

சூரிய கிரகணம் எப்போது நிகழும்?

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று நிகழ உள்ளது.


கிரகண ஆரம்ப காலம் : மாலை 05.14 மணி

கிரகண மத்திய காலம் : மாலை 05.42 மணி

 கிரகண முடிவு காலம் : மாலை 06.10 மணி

கர்ப்ப ஸ்திரிகள் மாலை 05.00 மணி முதல் 06.30 வரை சூரியனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.


 சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா?


இந்தியாவில் சில பகுதியில் மட்டும் கிரகணம் தெரியும். சில பகுதியில் ஆரம்பமும், மத்தியமும் தெரியும். ஆனால் கிரகண முடிவுகள் என்பது இந்தியாவில் தெரியாது.


 இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் ஓரளவு தெரியும் என்பதால் பாதிப்பு இருக்காது.


சூரிய கிரகணம் தெரியும் நகரம் :


டெல்லி 


 மும்பை 


 மைசூர் 


 பெங்களூர் 


 பாலக்காடு 


 

திருவனந்தபுரம்


 ரூடவ்ரோடு 


கோயம்புத்தூர் 


திருப்பூர்


 திருநெல்வேலி 


 ஊட்டி 


 சூரிய கிரகணம் வேறு எங்கு தெரியும்?


இந்த கிரகணம் ஐரோப்பா, தெற்குஃமேற்கு ஆசியா, வடக்குஃகிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அட்லாண்டிக் ஆகிய பகுதிகளில் தெரியும்.


பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை மற்றும் சதயம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

*கிரகண நேரத்தில்  செய்ய வேண்டியவை  செய்யக் கூடாதவை* .

 
     💥  1. கிரகணத்தால்  பல உடல் உபாதை உண்டாகும் ஆதலால் அவற்றைத் தவிர்க்க கிரகண நேரத்தில்  வெறும் வயிற்றுடன்  இருத்தல் வேண்டும். சந்திர கிரகணம் இரவில் வருவதால்  பிரச்சனை இல்லை. சூரிய கிரகணம் பகலில் வருவதால்  கிரகணம் ஆரம்பிப்பதற்கு  முன்பு  வயிறு காலியாக இருத்தல் வேண்டும்.  உணவு ஜீரணம் அவதற்கு  சில மணி நேரம் ஆவதால் சில மணி நேரம் முன்பே உணவை நிறுத்த வேண்டும். 
     🌷  2. கிரகணத்தின் போது  ஊர் சுற்றக் கூடாது. *கர்பிணிப்பெண்கள்  வெளியே வரக் கூடாது. திறந்த வெளியில் இருக்கக்  கூடாது*
     ☸️  3. கிரகணத்தை நேரே பார்க்கக் கூடாது.  தாம்பாளத்தில் நீர் வைத்து அதில் விழும் நிழல் மூலம் பார்ப்பது  நல்லது.    
     🌺  4. தர்ப்பைப் புல் கிடைக்கும் வசதி உள்ளவர்கள்  தர்பைப்  புல் துண்டுகளை  மாதாந்திர வருடாந்திர  அரிசி பருப்பு போன்ற உணவுப் பொருட்களில் போட்டு வைத்து  கிரகணம்  விட்ட பின்னர் எடுக்க வேண்டும்.  *துணியைப் பூச்சி அரிக்காமல்  இருக்க  அந்த நாளில் துணிப் பெட்டிகளில் வேப்பிலை போட்டு வைப்பார்கள்.  இவ்வாறே  தர்ப்பை  உணவுப் பொருட்களைப்  பாதுகாக்கிறது* .   



Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags