*எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவ தொகுத்தறி தேர்வு பற்றிய சந்தேகமும் .. அதற்குரிய விளக்கமும்*
1) *1 முதல் 3 ஆம் வகுப்பு வரை 2- ஆம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு எப்போது?*
*1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீடு 13.12.2022 முதல் 23.12.2022 வரை முதல் பருவத்தில் நடத்தப்பட்டது போலவே நடத்திட வேண்டும்.*
2) *1 முதல் 3 ஆம் வகுப்பு வரை 2- ஆம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு எந்தெந்த முறைகளில் நடத்தப்பட வேண்டும்?*
*1 முதல் 3 ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு 'எண்ணும் எழுத்தும் செயலி மூலமாகவும், எழுத்துபூர்வமாகவும் நடத்தப்பட வேண்டும்.*
3) *எழுத்துப் பூர்வமாக நடைபெற இருக்கும் தேர்வில் வினாத்தாள்கள் எவ்வாறு வழங்கப்படும்?*
*PDF வடிவிலான தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்கள் (தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம்) ஆசிரியர்களின் எண்ணும் எழுத்தும் செயலியிலேயே பதிவிறக்கம் செய்யத்தக்க வகையில் வழங்கப்படும்.*
4) *எண்ணும் எழுத்தும் செயலி மூலமாக தேர்வு எந்த தேதி முதல் எந்த தேதி வரை நடத்தப்பட வேண்டும்?*
*எண்ணும் எழுத்தும் செயலி மூலமாக 13.12.2022 முதல் 20.12.2022 வரை தேர்வு நடத்தப்பட வேண்டும்.*
5 ) *எழுத்துப்பூர்வமான தேர்வு எப்போது நடத்தப்பட வேண்டும்?*
*எண்ணும் எழுத்தும் செயலி வாயிலாக மாணவர்களுக்கு மதிப்பீடு முடித்த பிறகு கடைசி மூன்று தினங்களான 21,22 மற்றும் 23.12.2022 தேதிகளில் முறையே தமிழ்,ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கான தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்திக் கொள்ளலாம்.*
6) *எழுத்துப்பூர்வமான தேர்வுக்குரிய வினாத்தாள்களை பாடம் கற்பிக்கும் ஆசிரியர் வடிவமைத்து கொள்ளலாமா?*
*எண்ணும் எழுத்தும் செயலியில் pdf வடிவத்தில் வழங்கப்படும். தொகுத்தறி வினாத்தாளைத் தவிர ஆசிரியர் விரும்பும் வகையில் தொகுத்தறி வினாத்தாளை வடிவமைத்து அதன் விளைவுகளை விருப்பத்தின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்து கொள்ளலாம்.*
7. *எழுத்துப்பூர்வமாக நடத்தப்படும் தேர்விற்கான மதிப்பீடு கட்டாயமா?*
*எழுத்துப்பூர்வமாக நடத்தப்படும் தேர்விற்கான மதிப்பீடு முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது (Only Optional) மட்டுமே.*
8. *எழுத்துப்பூர்வமாக நடத்தப்படும் தேர்விற்கான மதிப்பெண்களை எண்ணும் எழுத்தும் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டுமா?*
*எழுத்துப்பூர்வமாக நடத்தப்படும் தேர்விற்கான மதிப்பெண்களை எண்ணும் எழுத்தும் செயலியில் பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.*
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.