தைப்பொங்கல் வைக்க வேண்டிய நேரம்
பொங்கல் என்றாலே அது சூரிய பகவானுக்காக கொண்டாடப்படக்கூடிய பண்டிகை. ஆகையால் சூரிய பகவான் உதயமாகும் போது, சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து குடும்பத்தோடு பொங்கலோ பொங்கல், என்ற வார்த்தைகளை சொல்லி வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு.
அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேலை 5.00 மணிக்கு பொங்கல் வைக்க தொடங்கி விட வேண்டும். அப்படி என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் 4.00 மணிக்கே எழுந்து குளித்து இருக்க வேண்டும். உங்களுக்கு வசதி இருந்தால் மொட்டை மாடியில் அல்லது வீட்டுக்கு வெளியே புறத்திலோ சாணம் மெழுகு அதன் மேலே பச்சரிசி மாவால் கோலம் போட்டு, செங்கற்களை அடுக்கி விறகு மூட்டி மண்பானை அல்லது பித்தளை பானை அல்லது வெங்களப்பானை உங்கள் வீட்டில் எது இருக்கிறதோ அந்த பானையை வைத்து அதில் பொங்கல் வைக்க வேண்டும்.
பொங்கல் வெந்து தயாராகுவதற்கு ஒரு மணி நேரம் எடுக்கும். காலை 6.00 மணிக்கு சூரியன் உதயமாகும் போது தயாரான பொங்கலை சூரிய பகவானுக்கு படைத்து, சூரிய பகவானுக்கு நன்றிகள் தெரிவித்து, வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளும் விவசாயமும் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரையும் நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்று சூரிய பகவானிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பொங்கல் வைக்கக்கூடிய இந்த இடத்தில் வழக்கம் போல மஞ்சள் கொத்து, காய்கறிகள், கரும்பு, இவைகளை எல்லாம் படைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அந்த பொங்கலை சாப்பிடுவது வழக்கம்.
வெளியிடங்களில் எல்லோராலும் நெருப்பு மூட்டி பானையில் பொங்கல் வைக்க முடியாது. வீட்டிற்கு உள்ளேயே கேஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைப்பதாக இருந்தாலும் சரி, குக்கரில் பொங்கல் வைக்காதீங்க. உங்கள் வீட்டில் இருக்கும் பாத்திரத்தில் பொங்கல் வைத்து பொங்கல் தயாரானதும் அதை வாழை இலையில் வைத்து நிவேதியமாக, சூரியன் உதயமாகும் போது சூரியனுக்கு அந்த பொங்கலை படைத்து பூஜை செய்வது சிறப்பு.
அதிகாலை வேலை 5:00 மணியிலிருந்து 6:00 மணிக்குள் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபாடு செய்வதை சரியான நேரம். ஆனால் இந்த நேரத்தில் வழிபாடு செய்ய முடியாதவர்கள் மதியம் 12.00 மணிக்கு முன்பாக உங்களால் எப்போது முடியுமோ அப்போது பொங்கல் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைக்கலாம் தவறு கிடையாது.
பொங்கல் வைக்கும் முறை:
சில பேர் வீட்டில் சர்க்கரை பொங்கல் மட்டும் வைப்பார்கள். சில பேர் வீட்டில் இரண்டு பொங்கல் வைப்பார்கள். சர்க்கரை பொங்கல், வெள்ளை பொங்கல் என்று இரண்டு பொங்கல் வைப்பது வழக்கமாக இருக்கும். அதாவது பொங்க சோறு என்று வெறும் பச்சரிசியில் தண்ணீர் ஊற்றி கொஞ்சமாக பால் விட்டு வேக வைத்து சூரிய பகவானுக்கு படைப்பது வழக்கமாக இருக்கும். உங்களுடைய வீட்டில் நீங்கள் எப்படி பொங்கல் வைப்பீர்களோ, உங்கள் வீட்டில் எது வழக்கமாக இருக்கிறதோ, அதை உங்கள் விருப்பம் போல வைத்துக் கொள்ளலாம். இத்தனை பொங்கல் தான் வைக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.அதேபோல இந்த பொங்கல் தைத்திருநாளில் காய்கறிகளை எல்லாம் மொத்தமாக போட்டு செய்கின்ற குழம்பு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். நிறைய பேர் வீடுகளில் வெறும் வெள்ளை பொங்க சோறு மட்டும் வைத்து, அந்த பொங்க சோறுக்கு மேலே எல்லா காய்கறிகளையும் சேர்த்து குழம்பு ஊற்றி சாப்பிடுவது வழக்கமாக இருக்கும். குடும்பத்தோடு இப்படி இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது என்பது வீட்டில் இருப்பவர்களுக்கு அத்தனை மன நிறைவை கொடுக்கும். இந்த தைத்திருநாள் அன்று எப்படி சொந்த பந்தங்களும், ஊர் உறவும் சேர்ந்து சந்தோஷமாக மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடுகிறதோ, அதேபோல இந்த வருடம் முழுவதும் அவர்களுக்கு சந்தோஷம் பொங்கி வழிய வேண்டும் என்ற வேண்டுதலை சூரிய பகவானிடம் வைத்து, அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்வோம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.