சிறப்பு படிகள் பெற தணிக்கை தடை - பெற்ற பணத்தை திரும்ப செலுத்த உத்தரவு ( ஆசிரியர்கள் பட்டியல் இணைப்பு...)
காஞ்சிபுரம் ஒன்றியத்தில் கல்வி துறை தணிக்கை அறிக்கை...
“ அரசு ஆணை எண் .303 ஊதியக்குழு நாள் 11.10.2017 ன்படி 01.01.2016 முதல் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் தனி ஊதியங்கள் மாற்றியமைக்கப்பட்டு 01.01.2016 முதல் கருத்தியலாகவும் 01.10.2017 முதல் பணப்பலனும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஆணை எண் .304 ஊதியக்குழு நாள் 13.10.2017 மற்றும் அரசு ஆணை எண் , 306 ஊதியக்குழு நாள் 13.10.2017 ஆகிய அரசாணைகளில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு திருத்தப்பட்ட சிறப்பு படிகள் மற்றும் இதர படிகள் வழங்கி ஆணையிடப்பட்டு 01.10.2017 முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மேற்காணும் அரசாணையில் தெரிவிக்கப்படாத சிறப்பு படிகள் ரூ .500 / - மற்றும் ரூ .30 / - 01.10.2017 முதல் பெற்று வழங்கப்பட்டு வருவது தணிக்கை தடையாகிறது.
எனவே 01.10.2017 முதல் வழங்கப்பட்ட இணைப்பில் கண்டுள்ளவாறு கணக்கிடப்பட்ட ரூ .34,90,240 / - பிடித்தம் செய்யப்பட்டு அரசு கணக்கில் திரும்ப செலுத்தி அதன் விவரம் தணிக்கைக்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் . " எனவே , இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் அவர்களின் பெயருக்கெதிரே தெரிவிக்கப்பட்டுள்ள தொகையினை IFHRMS மென்பொருள் மூலமாக தங்களது Login வழியாக E - Challan மூலமாக செலுத்தி , செலுத்து சீட்டின் மூன்று நகல்களை 15.04.2024 க்குள் இவ்வலுவகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.👆👆👆👆👆👆👆
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.