உலகக்கோப்பை டி20 போட்டிகள்
இன்னும் இரு தினங்களில் தொடங்கப்போகும் சூழ்நிலையில்
கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு இம்முறை என்னென்ன விசயங்கள் காத்திருக்கின்றன என்பது குறித்தே இந்தப் பதிவு
இருவருடங்களுக்கு ஒரு முறை
டி20 எனப்படும் இருபது ஓவர்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை நடக்கிறது.
முதல்முறையாக வட அமெரிக்க கண்டத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கின்றன.
ஒருங்கிணைந்த அமெரிக்க மாகாணங்களும்
மேற்கிந்தியத் தீவுகளும் இணைந்து
இந்த போட்டிகளை நடத்த இருக்கின்றன.
வரலாற்றில் அதிகபட்சமாக
இருபது நாடுகள் இந்த உலக்ககோப்பையில் பங்குபெற இருக்கின்றன.
அணிகள் எவ்வாறு தேர்ச்சி பெற்றன?
போட்டியை நடத்தும்
அமெரிக்க நாட்டு அணியும்
மேற்கிந்தியத் தீவுகள் அணியும் முதல் இரண்டு அணிகளாக
தேர்ச்சி பெற்றன.
2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பையில்
முதல் எட்டு இடங்களைப் பிடித்த
ஆஸி
இங்கிலாந்து
இந்தியா
நெதர்லாந்து
நியூசிலாந்து
பாகிஸ்தான்
தென் ஆப்ரிக்கா
இலங்கை
ஆகிய நாடுகளின் அணிகள் நேரடியாக இந்தப் போட்டிகளில் விளையாட தேர்ச்சி பெற்றன.
ஐசிசி தரவரிசை பட்டியலில்
அடுத்த இரண்டு இடங்களில் இருந்த
ஆஃப்கானிஸ்தான்
பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் தேர்ச்சி பெற
அடுத்த எட்டு அணிகளை தேர்ந்தெடுக்கும் போட்டிகள்
உலகமெங்கும் உள்ள நாடுகளை
ஐந்து கண்டங்களாகப் பிரித்து குவாலிஃபயர்களாக நடந்தன
இதில்
ஆப்ரிக்க கண்டத்தில்
20 நாட்டு அணிகளுள் நடந்த கடும் போட்டிகளின் முடிவில்
நமீபியா & உகாண்டா ஆகிய இரு அணிகள் தேர்வாகின.
நாம் பொதுவாக எதிர்பார்க்கும்
ஜிம்பாப்வே , கென்யா ஆகிய அணிகளால் தேர்வாக இயலவில்லை.
ஆசிய கண்டத்தில் 15 நாட்டு அணிகள் மோதி
அதில் இருந்து
நேபாளம் மற்றும் ஒமான் அணிகள் தேர்வாகியுள்ளன.
ஐரோப்பிய கண்டத்தில் போட்டி அதிகம்.
32 நாடுகள் மோதிக் கொண்டதில் இறுதியாக
அயர்லாந்தும் ஸ்காட்லாந்தும் வாகை சூடியுள்ளன.
வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களைச் சார்ந்த ஒன்பது நாடுகள் பலப்பரீட்சை நடத்தியதில்
கனடா தேறியுள்ளது.
கிழக்க ஆசிய பசிபிக் பகுதிகளில் ஒன்பது நாடுகளில் இருந்து பபுவா நியூ கினியா தேறியுள்ளது.
அதாவது 85 நாடுகளுக்கு இடையே நடந்த கடுமையான போட்டிகளுக்குப் பிறகு இந்த எட்டு அணிகளும் தேர்வாகியுள்ளன.
எனவே இவற்றை கத்துக் குட்டி அணிகள் என்று கூறுவதை விடவும்
பெரிய அணிகளின் இதயங்களை நொறுக்கக் காத்திருக்கும் அணிகள் என்றே கூறுவது சரியாக இருக்கும்.
ஐம்பது ஓவர் போட்டிகளில்
நின்று நிலைத்தும் ஆட வேண்டும்
பதுங்கிப் பாயவும் வேண்டும்
ஆனால்
டி20 இல் அப்படி எந்த விதிமுறையும் இல்லை..
அன்றைய நாளில் எந்த அணியும் எந்த அணியையும் வெல்லலாம் என்ற கோட்பாடு டி20க்குப் பொருந்தும்.
எனவே இந்த உலகக்கோப்பையில் பல அப்செட்களையும்
நெய்ல் பைட்டர்களையும்
க்ளிஃப் ஹேங்கர்களையும் நாம் காண இருக்கிறோம்
அதற்கு முக்கிய காரணமாக
இந்த எட்டு அணிகளும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
பார்ப்போம்.
அடுத்து போட்டிகள் எப்படி நடத்தப்பட உள்ளன?
இந்த இருபது அணிகளையும்
குழுவுக்கு ஐந்து அணிகளாக நான்கு குழுக்களாக பிரித்துள்ளனர்
குழு ஏ
1. இந்தியா
2. பாகிஸ்தான்
3. கனடா
4. அயர்லாந்து
5. அமெரிக்கா
குழு பி
1. இங்கிலாந்து
2. ஆஸ்திரேலியா
3. நமீபியா
4. ஸ்காட்லாந்து
5. ஓமான்
குழு சி
1. நியூசி
2. மேற்கிந்தியத் தீவுகள்
3. ஆஃப்கானி
4. பபுவா நியூ கினியா
5. உகாண்டா
குழு டி
1. தென் ஆப்ரிக்கா
2. இலங்கை
3. பங்களாதேஷ்
4. நேபாளம்
5. நெதர்லாந்து
இந்த குழுக்களில் இருப்பவர்கள் அவரவர் குழுவில் இருக்கும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதுவார்கள்
இதன் முடிவில் குழுவில் முதல் இரண்டு இடங்களில் தேறும் அணிகள்
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவார்கள்
சூப்பர் 8 சுற்றுக்குத் தேறிய எட்டு அணிகளையும்
பின்வரும் கணக்கு கொண்டு பிரித்திருக்கிறார்கள்
அதாவது
சூப்பர் 8 க்ரூப் 1
ஏ1
பி2
சி1
டி2
சூப்பர் 8 க்ரூப் 2
ஏ2
பி1
சி2
டி1
உதாரணம்
குழு ஏ வில் ஏ 1 இந்தியா தான்
இந்தியா அந்த குழுவில் இரண்டாவதாக வந்தாலும்
அதற்கு ஏ1 என்ற எண் தான் வழங்கப்படும் என்பதால்
சூப்பர் 8 இல் க்ரூப் 1 இல் தான் இருக்கும்.
பாகிஸ்தான் நம்பர்1 வந்தாலும் 2 வந்தாலும் சூப்பர் 8 க்ரூப் 2இல் தான் வைக்கப்படும்.
இனி சூப்பர் 8 சுற்றில்
அந்தந்த குழுவுக்குள் உள்ள அணிகள் தங்களுக்குள் பலப்பரீட்சை நடத்துவார்கள்
இறுதியில்
இரண்டு குழுவிலும்
முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள்
அரையிறுதி ஆட்டங்களுக்கு ( நாக் அவுட் சுற்றுக்கு) செல்வார்கள்
சூப்பர் 8 குழு ஒன்றின் வெற்றியாளரும்
சூப்பர் 8 குழு இரண்டின்
ரன்னர் அப்பும் முதல் செமி பைனலில் மோதுவார்கள்
இந்த செமி பைனலுக்கு - ரிசர்வ் நாள் உண்டு.
சூப்பர் 8 குழு ஒன்று
ரன்னர் அப்பும்
சூப்பர் 8 குழு இரண்டின்
வின்னரும்
- இரண்டாவது செமி பைனலில் மோதுவார்கள்
இந்த செமி பைனலுக்கு - ரிசர்வ் நாள் கிடையாது. ஆனால் எக்ஸ்ட்ரா 250 நிமிடங்கள் வழங்கப்படும்.
இந்தியா அரையிறுதிக் முன்னேறும் பட்சத்தில் இரண்டாவது செமி பைனலில் தான் விளையாடும்.
காரணம் - அப்போது தான் இந்திய ரசிகர்கள் இரவு எட்டு மணிக்கு காண முடியும்.
செமிபைனல்களில் ஜெயிப்பவர்கள் வழக்கம் போல
பைனலில் விளையாடுவார்கள்
சென்ற முறை இங்கிலாந்திடம் இருக்கும் கோப்பையை
பைனலில் வெற்றி பெறுபவர்கள் கைப்பற்றுவார்கள்.
ஜன் 2 முதல் 29 வரை
மொத்தம் 55 போட்டிகள்
இந்தியா விளையாடும் போட்டிகள்
இரவு எட்டு மணி முதல்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் காணக் கிடைக்கும்.
இந்தியாவும் பங்களாதேஷும் ஜூன் ஒன்று இரவு எட்டு மணிக்கு முதல் வார்ம் அப் மேட்ச் விளையாட உள்ளனர்.
இந்தியா
ஆஸி
பாக்
வெஸ்ட் இண்டீஸ்
ஆகியன அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் என்று நான் கணிக்கிறேன்
பார்ப்போம்...
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.