1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

அலுவலக கடிதம் எழுதும்போது இவ்வளவு பிழைகளா? திருத்திக் கொள்வோம்

 

*திருத்திக் கொள்வோம்...*

💥தலைமை ஆசிரியை என்ற ஒரு சொல் கிடையாது. ❌ ஆண்/ பெண் இருபாலரும் ஆசிரியர் தான் ஆசிரியை என்று குறிப்பிட கூடாது. ❌

ஆசிரியை என்று ஒரு சொல் கிடையாது.❌

💥 அதே போல் ஆங்கிலத்தில் HEADMASTER / TEACHER.. தான் சரி..

HEADMISTRESS என்பது தவறு.. ❌

💐 நாம் கடிதம் எழுதும் பொழுது பதவியை குறிக்கும் போது மேதகு/ மாண்புமிகு/ மதிப்பிற்குரிய போன்ற மரியாதை சொற்களை சேர்க்கத் தேவையில்லை. வட்டார கல்வி அலுவலர் /இயக்குநர்/ மேலாளர் இவை அனைத்தும் பதவியின் பெயர். அதனால் அவை அஃறிணைச்சொல். அதனால் வட்டார கல்வி அலுவலர் அவர்கள் என்று எழுதத் தேவையில்லை. அனுப்புநர்/ பெறுநர் இதுவே சரியான சொல்லாகும். இச்சொல் முடியும்போது முற்றுப்புள்ளி /காற்புள்ளி/ அரை புள்ளி இடத் தேவையில்லை.

💐 தொடக்கப்பள்ளி/ நடுநிலைப்பள்ளி/ உயர்நிலைப்பள்ளி/ மேல்நிலைப்பள்ளி/ இவை அனைத்தும் ஒரே சொல் தான். இவற்றை எழுதும்போது இடைவெளி விட்டு எழுத தேவை இல்லை.

💐 வடமொழிச் சொற்களை எழுதும்போது ஜூலை என்பதற்கு பதிலாக ஜீலை என்று எழுதுகிறோம். இது பொதுவான தவறாக உள்ளது.

💐கடிதம் எழுதும் போது

இடம்:

 நாள்:

 என்று தான் குறிப்பிட வேண்டும்.

💐 பொதுவாக இருவரும் என்று எழுதக்கூடாது. இரண்டு பேரும் என்று தான் வாக்கியம் வர வேண்டும் .

💐நாட்கள் என்று எழுதக்கூடாது. நாள்கள் என்று தான் எழுத வேண்டும்.

💐 தனியர்/ அன்னாரது என்று சொற்களை கடிதத்தில் பயன்படுத்தக்கூடாது. இவை காலம் சென்ற மனிதர்களையே குறிக்கக்கூடிய அஃறிணைச் சொல்லாகும். அவற்றை நாம் கடிதங்களில் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதை தவிர்க்க வேண்டும். 

💐கடிதத்தை முடிக்கும் பொழுது கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்று எழுதுகிறோம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்பதும் அஃறினை பொருட்களை குறிக்கும் சொல்லாகும். கேட்டுக்கொள்ள பெறுகிறீர்கள் என்றே முடிக்க வேண்டும்.

💐நம் பெயர் எழுதும்போது M என்ற initial எழுத்தை எம் என்று எழுதுகிறோம். அவ்வாறு எழுத கூடாது. பெயரின் முதல் தமிழ் எழுத்தாகிய ம என்ற எழுத்தையே எழுத வேண்டும்.

💐 திருவாளர் என்னும் சொல்லையே சுருக்கமாக திரு என்று குறிப்பிடுகிறோம்.

எடுத்துக்காட்டாக 

திரு.மோகன் என்று எழுத வேண்டும். ஆனால் திருமதி என்பது முழு சொல்லாகும்.

அதனை எழுதும் பொழுது முற்றுப்புள்ளி வைக்க கூடாது.

திருமதி கவிதா என்று எழுத வேண்டும். நாம் இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்யாமலும் நம் மாணவர்களுக்கும் இக்கருத்துகளை கொண்டு செல்வோம் என்பதற்காக இப்பதிவு


Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags