அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு.
மகப்பேறு விடுப்பு ஓராண்டு காலம் அனுமதிக்கப்படுகிறது...
மனித வள மேம்பாட்டு துறை அடிப்படை விதி 44 இல் திருத்தம் அரசாணை 89 HRD Dt 09.09.2021 ஒன்றை வெளியிட்டுள்ளது....
சில WhatsApp குழுக்களில்...
இனி மகப்பேறு விடுப்பு காலத்திற்கு வீட்டு வாடகை படி கிடையாது என தகவல் பரிமாற்றம் செய்ய படுகிறது...
*அது முற்றிலும் தவறு* ...
அடிப்படை விதி 44 உட்பிரிவு 4(b)
இன் படி ஆறு மாதங்களுக்கு உட்பட்ட விடுப்பிற்கு (மகப்பேறு விடுப்பு உட்பட) மட்டுமே வீட்டு வாடகை படி உண்டு...
தற்போது மகப்பேறு விடுப்பு 6 மாதத்திற்கு மேல் இருப்பதால்...
வீட்டு வாடகை படி மறுக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு...
தற்போது அடிப்படை விதி 44 உட்பிரிவு 4(b) இல் *மகப்பேறு விடுப்பு என்பது* நீக்கப்பட்டுள்ளது...
அதாவது மகப்பேறு விடுப்பு காலம் முழுமைக்கும் வீட்டு வாடகை படி உண்டு🙏🏻
*ஓர் ஆண்டு விடுப்பு காலத்திற்கு முழுமையாக வீட்டு வாடகை படி* பெறும் நோக்கில் தான் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது....
இந்த அரசாணை 7/11/2016 முதல் அமலுக்கு வந்ததாக கருதப்படுகிறது
( மகப்பேறு விடுப்பு 6 to 9 மாதமாக மாற்றப்பட்டது முதல்)
எனவே யாருக்காவது மகப்பேறு விடுப்பு 9 மாத காலத்திற்கு வீட்டு வாடகை படி பெறாமல் இருந்தால் அவர்கள் இந்த அரசாணை மூலம் வீட்டு வாடகை படி பெற்றுக் கொள்ளலாம்👍🏼
அரசாணை இணைக்கப்பட்டுள்ளது.
தகவலுக்காக.
பொதுச் செயலாளர்
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு 7373803777
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.