பள்ளிகள் திறப்பில் அவசரம் வேண்டாம்: விஞ்ஞானி எச்சரிக்கை
‛‛தேசிய அளவில் கொரோனா வைரஸின் 3வது அலை வாய்ப்பு குறைவு என்றாலும், பள்ளிகள் திறப்பில் அரசுகள் அவசரம் காட்ட வேண்டாம்,'' என்று ஐ.சி.எம்.ஆர்., முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேட்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கொரோனா தாக்கத்தின் நீண்ட நாள் பக்க விளைவுகளில் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பள்ளிகளைத் திறப்பதில் பரவலான அணுகுமுறை தேவை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் பாதிப்பு எண்ணிக்கையைப் பொறுத்து பள்ளிகளைத் திறப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யலாம்.
நோய்க்கான அடிப்படைக் காரணமாக மக்கள் தொகை அடர்த்தி, போக்குவரத்து, புலம் பெயர்வு அமைகிறது. 3வது அலை உருவாகும் என்று வைத்துக் கொண்டாலும் அதன் தீவிரம் மற்றும் பரவல் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடவே செய்யும். பலவீனமான பகுதிகளில் 3வது அலை ஏற்படலாம்.
நமக்கு அதிக தொற்றுக்கள் உருவாகவே வாய்ப்பு. தடுப்பூசிகளினால் நோய்க்கிருமிகளை முற்றிலும் ஒழிக்கும் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கவில்லை. இந்தத் தடுப்பூசிகள் நோயை மாற்றும் தன்மை கொண்டவையே தவிர வைரஸுக்கு எதிராக முழுப்பாதுகாப்பு அளிக்கவில்லை. ஆனால், தடுப்பூசிகளையும் மீறி புதிய உருமாறிய கொரோனா வந்தால்தான் ஆபத்து.
கொரோனா வைரஸ் உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் தாக்கம் செலுத்தக் கூடியது. பள்ளிகளை திறப்பதில் அச்சம் நீங்கிய அணுகுமுறை தேவை. மாவட்ட நிர்வாகங்கள் பள்ளி திறப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். உள்ளூர் நிலவரங்களின் படியே திறக்கப்பட வேண்டும். கல்வியும் தேவைதான். ஆனால், நோய் - கல்வி இடையே சமச்சீரான அணுகுமுறை தேவை. கொரோனா நமக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து கற்றுக் கொண்டு நெகிழ்வுத் தன்மையுடன் முடிவுகளை எடுப்பதுதான் சிறந்தது. இவ்வாறு விஞ்ஞானி ராமன் கங்காகேட்கர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.