பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு சில யோசனைகள்
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவியதன் காரணமாக மார்ச்சில் பள்ளிகளுக்கும், பின்னர் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
ஒரு மாதமாக கொரோனா தொற்று குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று(செப்.,1) திறக்கப்பட்டன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முதல்கட்டமாக நேரடி வகுப்புகள் துவங்கின. இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நமது குழுந்தைகள் பாதுகாப்புடன் சென்று வர சில யோசனைகள்:
1. யாரிடமும் மதிய உணவு தின் பண்டங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
2. கைக்குட்டை இரண்டு, முகவசம், துண்டு கொடுத்து அனுப்புங்கள்.
3. எந்த பொருட்களையும் யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமும் பெறவும் வேண்டாம்.
4. படிக்கட்டுகளில் ஏறும் பொழுதும், கழிவறைகளுக்கு செல்லும் போதும் இடைவெளி விட்டு செல்ல அறிவுறுத்துங்கள்.
5. பள்ளி சென்று வந்ததும் குளித்து விட்டு வீட்டுக்குள் செல்ல சொல்லுங்கள்.
6. உடல் சோர்வு, இருமல், இது போன்று வேறு தொந்தரவு இருந்தால் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.
7. சுடுதண்ணீர் கொடுத்து அனுப்புங்கள்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.