கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே 9 முதல் 12 வரையில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளதால் 1 முதல் 8 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் எப்போழுது தொடங்கும் என்பதில் தொடர்ந்து குழுப்பமான சூழ்நிலை உருவாகி வருகிறது.
இந்நிலையில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பு எப்போது? என்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.