தமிழகத்தில் பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இருக்காது. தற்போது இருக்கிற வினாத்தாள் நடைமுறையே தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் அரசு பள்ளி மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் கல்வி தொலைக்காட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தடையில்லா கல்வியை வழங்கியது. மேலும் பெற்றோர்களிடம் கல்வி கட்டணத்தை வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டது. அரசின் சீரிய முயற்சிகளால் நடப்பு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து இன்று 9 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோபார்ட் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மாணவர்களை கற்றலுக்கு மனரீதியாக தயார்படுத்தும் வகையில் 45 தினங்களுக்கு புத்துணர்வு வகுப்புகள் மட்டுமே நடைபெற வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்துள்ள இந்த பெருந்தொற்று காலத்தில் கல்விக்கட்டணம் செலுத்த கோரி வற்புறுத்தும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இருக்காது அவ்வாறு மாற்றினால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவும் என்பதால் தற்போது இருக்கின்ற வினாத்தாள் நடைமுறையே தொடரும் என்றும் கூறியுள்ளார்.







No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.