1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலால் கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கரோனா குறைந்ததையடுத்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை சமர்பித்தது.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று கூறியது,
“பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. 1ஆம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றனர்.
ஆனால், பெற்றோர்கள் மத்தியில் கரோனா அச்சம் இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை. கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொருத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.”
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.