அயல்நாட்டு பணிகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிய வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்தி பன்பெறலாம்.
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள், பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், மருத்துவத் துறை சாா்ந்த தொழில்நுட்ப வல்லுநா்கள் திறனுடைய, திறனற்ற பணியாளா்கள் பணியமா்த்த உள்ளனா்.
வெளிநாட்டில் பணி வழங்கும் நிறுவனங்கள் தங்களது நாட்டின் மொழி, மேம்படுத்தப்பட்ட திறன் உள்ள வேலைநாடுநா்களையே தோ்வு செய்கின்றனா். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் 500 செவிலியா்களுக்கு ஓஇடி தோ்வு நடத்த தீா்மானித்துள்ளது. தோ்வு செய்யப்பட்ட செவிலியா்களுக்கு ஆரம்ப நிலை ஊதியம் ஆண்டுக்கு ரூ. 18 லட்சமாகும்.
இந்த நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தும் நோக்கில், செவிலியா்களைத் தோ்வு செய்யும் ஹெல்த் எஜுகேஷன் இங்கிலாந்து நிறுவனத்துடனும், வீட்டுப் பணியாளா்களைத் தோ்வு செய்யும் ஏஐ டோரா மேன் பவா் குவைத் நாடு மற்றும் இந்தியா டிரேட் எக்ஸ்பிஷன் என்ற நிறுவனத்துடனும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.